தமிழகத்துடன் போட்டிபோடும் மூன்று தென் மாநிலங்கள்

பெங்­க­ளூரு: தமி­ழ­கத்தை அடுத்து இதர தென் மாநி­லங்­க­ளான ஆந்­திரா, கர்­நா­டகா, கேர­ளா­வி­லும் கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து தென் மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க மேலும் பல அதி­ரடி நட­வடிக்­கை­களை மேற்­கொள்ள மாநில அர­சு­கள் முடிவு செய்­துள்­ளன.

அண்­மைய சில தினங்­க­ளாக கர்­நா­ட­கா­வில் கொவிட்-19 நோயாளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து சிறப்பு அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அம்­மா­நில அரசு முடிவு செய்­துள்­ளது.

இவ்­வா­ரம் பெங்­க­ளூ­ரு­வில் தின­மும் 2 லட்­சம் பேருக்கு கிரு­மித்­தொற்­றுக்­கான பரி­சோ­தனை மேற்­கொள்ள ஏற்­பா­டாகி உள்­ளது.

கர்­நா­ட­கா­வில் இது­வரை சுமார் 1.25 லட்சம் பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பெங்­க­ளூரு­வில் மட்­டும் சுமார் 49 ஆயி­ரம் பேருக்கு பாதிப்­புள்­ளது.

இந்­ந­க­ரில் மட்­டும் தின­மும் குறைந்­த­பட்­சம் 2 ஆயி­ரம் புதிய நோயா­ளி­கள் அடை­யா­ளம் காணப்­படு­கின்­ற­னர். இந்நிலையில், ஆகஸ்ட் மாத இறு­திக்­குள் கிருமிப்­ப­ர­வல் உச்­சத்தை அடை­யும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து தின­மும் இரண்டு லட்­சம் மாதி­ரி­களை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த பெங்­க­ளூரு மாந­க­ராட்சி திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே ஆந்­தி­ரா­வில் சனிக்­கி­ழ­மை­யன்று புதி­தாக 9,276 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்­ணிக்கை சுமார் 1.50 லட்­ச­மா­க­வும் மொத்த உயி­ரி­ழப்பு 1,407ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.

கேர­ளா­வில் புதி­தாக 1,129 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் அங்கு பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 24,742 ஆனது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon