சுடச் சுடச் செய்திகள்

சென்னை விமான நிலைய ஓடுதளத்திலும் ஆபத்து உள்ளது

சென்னை: சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடுதளமும் ஆபத்தாக விளங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது 2வது ஓடுதளம் பயன்படுத்தப்படுகிறது.

இதில், விமானம் தரையிறங்கும் போது அது அதிக தூரம் செல் வதைத் தடுக்க வேகத்தை குறைக்கும் தடுப்பு அரண் இல்லை.

இந்த ஓடுதளத்தின் மறு முனையில் (மணப்பாக்கம்) பாது காப்புக்கு தேவையான போதிய இடமோ வேகக் குறைப்புக்கான அரணோ இல்லை. இதனால் தரை யிறங்கும் விமானங்களுக்கு 2வது ஓடுதளம் ஆபத்தானதாக இருப்ப தாகக் கூறப்படுகிறது. இரண்டாம் ஓடுதளத்தில் விமானங்கள் பயன் படுத்தக்கூடிய தடத்தின் நீளம் 2,890 மீட்டர் ஆகும். இது ஏர்பஸ் 320, போயிங் 737 ரக விமானங்களுக்கு போதுமானது. ஆனால் மற்ற ரக விமானங்கள் தரையிறங்க 2ஆம் ஓடுதளம் பாதுகாப்பானதாக இல்லை என விமானப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் இரண்டாம் ஓடு தளத்தில் நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவை விமானி களுக்கு சிரமத்தை ஏற்படுத்து கின்றன. இந்த ஓடுதளத்தில் உள்ள தண்ணீர் டேங்க், மரங்கள், டவர்கள் தடங்கலாக இருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையமே பட்டிய லிட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் இப்படியொரு பிரச்சினை இருப்பதை மறுக்கவோ ஆமோதிக்கவோ இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon