10,000 உடற்பயிற்சிக் கூடம், ஆலயங்கள் திறக்கப்பட்டன கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடு

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள 10,000க்கும் அதி­க­மான உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திறக்­கப்­பட்­டன.

ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு திறக்­கப்­பட்­டுள்ள இந்த உடற் பயிற்சிக்கூடங்­களை மாலை 7 மணிக்­குள் மூட­வேண்­டும் என­வும் தமி­ழக அரசு நேரக் கட்­டுப்­பாட்டை விதித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் வகை­யில், கடந்த மாா்ச் மாதம் முதல் பொது­மு­டக்­கம் நடப்­பில் இருந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஊர­டங்கு கட்­டுப் பாடு­கள் ஒன்­றன்­பின் ஒன்­றாக தளர்த்­தப்­பட்டு வரு­வதை அடுத்து, அடுத்தகட்டமாக இப்போது செயல் பாட்டுக்கு வந்துள்ள உடற்­ப­யிற்­சிக் கூடங்­களை நாடி மக்­கள் வரத் தொடங்கி உள்­ள­னர்.

இந்த உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் 15 முதல் 50 வய­துள்ளோருக்கு மட்­டுமே பயிற்சி அளிப்பதற்கு அனு­மதி அளிக்­கப்பட்­டுள்­ளது.

அத்­து­டன், பயிற்சி பெறு­வோர் கிரு­மி­நா­சி­னி­யால் கைக­ளைச் சுத்­தம் செய்­ய­வும் முகக்­க­வ­சம் அணி­ய­வும் ஒரு மணி நேரத்­துக்கு ஒரு­வர் மட்­டுமே ஒவ்வொரு கரு­வி­யிலும் பயிற்சி மேற்­கொள்­ள­வும் அறிவுறுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து, தமிழ்­நாடு உடற் பயிற்சிக் கூட உரி­மை­யாளா் சங்­கச் செய­லாளா் ஏ.பகத் ஜஹாங்கீா் கூறு­கை­யில், “ஒரு சில கட்­டுப்­பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், உடற்­பயிற்­சிக் கூடங்­களை ந­டத்துவதற்கு தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. இது எங்க ளுக்கு பெரும் நிம்­ம­தி­ தந்­துள்­ளது.

“உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் திறக்­கப்­பட்­ட­தால் எங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதுகாக்­கப்­பட்­டுள்­ளது.

“கூடங்களை காலை 6 மணிக்கே திறப்­ப­தால் வாடிக்­கை­யா­ளா்­கள் பல­ரும் வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. வீட்­டில் இருந்து பணி­பு­ரி­வோ­ரும் இரவு நேர பணி­யில் ஈடு­ப­டு­வோ­ரும் இந்த உடற்­பயிற்­சிக் கூடங்­களை அதி­கம் நாடி வரு­வார்­கள் என்ற நம்­பிக்கை உள்­ளது,” என்று கூறி­னார்.

இதற்­கி­டையே, ஓட்­டு­நர் பயிற்­சிப் பள்­ளி­களும் நேற்­று­மு­தல் செயல்­ப­டத் தொடங்­கின.

தமிழகம் எங்கும் 5 மாதங்களுக்குப் பிறகு உடற் பயிற்சிக் கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.

உடற்பயிற்சி சந்தாதாரர்கள், இளையர்கள் உள்ளிட்ட பலரும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர். இரவு 7 மணிக்குள் உடற்பயிற்சிக் கூடத்தை மூடும்படி நேரக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களும் நேற்று முதல் திறக் கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

கடந்த மாதம் ஊராட்சி, கிராமப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இம்மாதம் மாநகராட்சி, நகரப் பகுதிகளில் ரூ.10,000க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.

சிறிய மசூதிகள், சிறிய தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங் களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். எனினும், பெரிய அளவிலான வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!