நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு தொற்று

சென்னை: கன்­னி­யா­கு­மரி தொகுதி காங்­கி­ரஸ் எம்­பி­யும் பிர­பல தொழி லதி­ப­ரு­மான வசந்­த­கு­மா­ருக்கு (படம்) கொரோனா தொற்று இருப்­பது உறுதியானதை அடுத்து, அவர் சென்னை அப்­போலோ மருத்­து­வ­மனை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளார்.

வசந்­த­கு­மா­ரின் மனை­வி­யும் இதே மருத்­து­வ­ம­னை­யில் கிரு­மித் தொற்று கார­ண­மாக சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

ஏற்­கெ­னவே எம்­பிக்­கள், எம்­எல்­ஏக்­கள், அமைச்­சர்­கள் என 32 பேர் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலை­யில், தற்­போது மேலும் ஒரு எம்பி பாதிக்­கப்­பட்டு உள்­ளது தமி­ழக மக்­களை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

கொரோனா ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்ட நிலை­யில், கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்திலும் சென்­னை­யில் பல்­வேறு பகு­திகளிலும் நிவா­ர­ணப் பொருட்­கள் வழங்­கும் பணி­யில் ஈடு­பட்டு வந்த வசந்­த­கு­மார், கடந்த சில நாட்­க­ளாக சென்­னை­யில் உள்ள வீட்­டில் தங்­கி­யி­ருந்­தார். இந்­நி­லை­யில், அவ­ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon