தண்ணீரில் மூழ்கியவர்களை சேலையால் காத்த பெண்கள்

பெரம்­பூர்: பெரம்­பூர் மாவட்­டத்­தில் உள்ள கொட்­டரை அணை­யின் நீரில் மூழ்­கிக்­கொண்­டி­ருந்த இரு இளை­ஞர்­களை மூன்று பெண்­கள் தங்­க­ளின் சேலையை வீசி காப்­பாற்றி உள்ள­னர்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த இந்­தச் சம்­ப­வம் இப்­போது சமூக வலைத்­த­ளங்­கள் வழி வெளிச்­சத்துக்கு வர, பல­ரும் பெண்­களைப் பாராட்டி வரு­கின்­ற­னர்.

சிறு­வாச்­சூர் கிரா­மத்­தைச் சேர்ந்த இளை­ஞர்­கள் நால்வர் கொட்­டரை அணைக்கு குளிக்க வந்­த­போது, செந்­த­மிழ் செல்வி, 38, முத்­தம்­மாள், 34, அனந்த வள்ளி, 34, ஆகிய மூன்று பெண்களும் தங்­கள் துணி­க­ளைத் துவைத்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

இளை­யர்­கள் நீரின் ஆழம் தெரி­யா­மல் நீந்­தச் சென்று, கரையேற முடி­யா­மல் தவித்­ததை அடுத்து, பெண்­கள் தங்­கள் துவைத்துக்கொண்டிருந்த சேலையை நீரில் வீசி­ இரு இளை­ஞர்­களைக் காப்­பாற்­றினர். மற்ற இரு­வர் நீரில் மூழ்கி இறந்­த­னர். அவர்­க­ளது உடல்­கள் தீயணைப்புப் படை­யி­ன­ரால் மீட்­கப்பட்டு உடல்­கூறு சோத­னைக்­காக பெரம்பூர் அரசு மருத்துவ­மனைக்கு அனுப்­பப்­பட்­டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon