லண்டனுக்கு கடத்தப்பட்ட ராமர், சீதை சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை: தமி­ழ­கத்­தில் இருந்து காணா­மல் போன மூன்று வெண்­க­லச் சிலை­கள் பிரிட்­டனின் தலை­ந­கர் லண்­ட­னில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, மீட்கப்­பட்­டுள்­ளன.

மயி­லா­டு­துறை மாவட்­டம், அனந்­த­மங்­க­லத்­தில் உள்ள ஒரு கோயி­லில் இருந்த ராமர், லட்சு மணர், சீதை­யின் வெண்­க­லத்­ தால் ஆன சிலை­கள் 1978ஆம் ஆண்­டில் கள­வு­போ­யின.

இந்நிலையில், நான்கு ஆண்டு ­க­ளுக்கு முன்பு லண்­ட­னைச் சேர்ந்த வியா­பாரி ஒரு­வர் இந்த மூன்று வெண்­க­லச் சிலை­களும் விற்­ப­னைக்கு உள்ளதாக இணை­யத்­தில் விளம்­ப­ரம் செய்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்­தவர் விஜ­ய­கு­மார். இவர், சிங்­கப்­பூ­ரில் வசித்து வந்த நிலையில், இந்த சிலை­கள் குறித்த தகவலை தமி­ழக சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு போலி­சா­ருடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

இதை­ய­டுத்து, சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு போலி­சார் அதற்­கான ஆதா­ரங்­களை பிரிட்­டிஷ் அர­சுக்கு அனுப்­பினர்.

இந்நிலையில், 42 ஆண்­டு­களுக்­குப் பிறகு அந்­தச் சிலை­கள் மீட்­கப்­பட்டு, இந்­திய தூத­ர­கத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இதைத்தொடர்ந்து, காணொளி வாயி­லாக மத்­திய கலா­சார, சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்­சர் பிர­ஹ­லாத் படேல் முன்­னி­லை­யில் தமி­ழக அர­சின் பிரதி­நி­தி­க­ளி­டம் இந்­தச் சிலை­கள் ஒப்­ப­டைக்கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!