விஜயகாந்துக்கு கொரோனா தொற்று; உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று; உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை

1 mins read
939b152a-39b4-47da-80b3-1721ca2e2f9f
படம்: ஊடகம் -

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

விஜயகாந்துக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் நடிகர்களும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து திரும்ப வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்