சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தமி­ழ­கத்­தில் இருந்து கேரளா, கர்­நா­டகா ஆகிய வெளி மாநி­லங்­க­ளுக்கு தின­மும் இரண்டு சிறப்பு ரயில்­கள் இயக்­கப்­படும் என தெற்கு ரயில்வே அறி­வித் துள்­ளது.

சென்னை சென்ட்­ரல்-திரு வனந்­த­பு­ரம் சிறப்பு ரயில், சென்ட்­ரல்-மங்­க­ளூரு சிறப்பு ரயில் நாளை 27ஆம் தேதி முதல் இயக்­கப்­பட வுள்­ள­தா­க­வும் ரயில்வே தெரிவித்­துள்­ளது.

கொரோனா ஊர­டங்­கின் கார­ண­மாக போடப்­பட்­டி­ருந்த பல கட்­டுப்­பா­டு­களும் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

ஆல­யங்­கள், சுற்­று­லாத் தளங்­கள் முதல் பேருந்து, ரயில் போக்கு ­வ­ரத்­து­கள் வரை படிப்­படியாகத் திறந்­து­வி­டப்­பட்டு வரு­கின்­றன.

இத­னால் முடங்­கிப் போயி­ருந்த மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பத் தொடங்கி உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த பொது முடக்­கத் தளர்­வு­க­ளுக்கு பின்­னர் தமி­ழ­கத்­திற்­குள் மட்­டும் சிறப்பு ரயில்­கள் இயக்­கப்­பட்டு வந்த நிலை­யில், முதன்­மு­றை­யாக தற்­போது வெளி­மா­நி­லங்­க­ளுக்­கும் சிறப்பு ரயில்­கள் இயக்­கப்­பட உள்ளன.

தற்­போது ஊர­டங்கு தளர்வு களால் மாவட்­டங்­க­ளுக்­குள் 13 பய­ணி­கள் ரயில்­கள் மட்­டும் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதைத் தொடர்ந்து சென்னை- திரு­வ­னந்த புரம், சென்னை-மங்­க­ளூரு வழித்­தடங்­களில் ரயில்­களை இயக்கு வதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.

சென்னை எம்­ஜி­ஆர் சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில் இருந்து திரு வனந்­த­பு­ரத்­துக்கு இரவு 7.45 மணிக்­கும் மங்­க­ளூ­ருக்கு இரவு 8.10 மணிக்­கும் சிறப்பு ரயில்­கள் புறப்­படும் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

சிறப்பு ரயில்­க­ளுக்­கான முன் பதிவு காலை 8 மணி முதல் தொடங்­கும் என்­றும் ரயில் நிலை­யத்­துக்கு வரும் அனைத்து பய­ணி­களும் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டும் என்றும் கொரோனா அறி­குறி இல்­லாத பய­ணி­கள் மட்­டுமே பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றும் ரயில்வே நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக மைசூ­ருக்­கும் சிறப்பு ரயில் அறி­விக்­கப்பட்­டி­ருந்த நிலை­யில் அத்­திட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!