மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்? வதந்தி பரப்பாதீர் என தேமுதிக வேண்டுகோள்

சென்னை: தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் மீண்­டும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக வெளி­யான தக­வல் அவ­ரது கட்­சித் தொண்­டர்­கள், ரசி­கர்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அவ­ரது உடல்­நிலை மீண்­டும் பாதிக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் உண்மை அல்ல என்­றும் அவர் வழக்­க­மான உடல் பரி­சோ­த­னைக்­கா­கவே மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்டி­ருப்­பதாக­வும் அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்­பு கார­ண­மாக சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றார் விஜயகாந்த். இதை­ய­டுத்து அளிக்­கப்­பட்ட சிகிச்­சை­யில் முழு­மை­யா­க குண­ம­டைந்து வீடு திரும்­பி­னார்.

எனினும் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொண்ட அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கிருமி தொற்றியது. அவரும் பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 2ஆம் தேதி வீடு திரும்­பிய விஜ­ய­காந்த், திடீ­ரென மீண்­டும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டது தேமு­திக தொண்­டர்­களை அதிர்ச்சி அடைய வைத்­தது. அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தி­ருப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் பலர் தக­வல்­களைப் பரப்­பி­னர்.

இந்­நி­லை­யில், இரண்­டாம்­ கட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­கா­கவே விஜ­ய­காந்த் மீண்­டும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தேமு­திக தலை­மைக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

அவர் நல்ல உடல்­ந­லத்­து­டன் இருப்­ப­தா­க­வும் வீண் வதந்­தி­களை யாரும் நம்­பவேண்­டாம் என்­றும் தேமு­திக தலை­மைக் கழகம் அறிக்கை ஒன்­றில் கேட்டுக் ­கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே விஜ­ய­காந்த் உடல்­நி­லை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்று அவ­ருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

“சீரான, திட்­ட­மி­டப்­பட்ட தொடர் சிகிச்­சைக்­காக விஜ­ய­காந்த் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு கதி­ரி­யக்க மதிப்­பீடு செய்­யப்­பட்­டது. விஜ­ய­காந்த் விரை­வில் வீடு திரும்­பு­வார்,” என அம்­மருத்து­வ­மனை நிர்­வா­கம் மேலும் கூறி­யுள்­ளது.

அண்மைக் காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14ம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!