ரூ 2,650 கோடி சாலை மேம்பாட்டு ஒப்பந்தம் ரத்து; எதிர்க்கட்சிகள் வரவேற்பு

தமி­ழ­கம் முழு­வ­தும் ஊராட்சி மன்­றங்­க­ளின் ஒப்­பு­தல் இல்­லா­மல் அறி­விக்­கப்­பட்ட ரூ.2650 கோடி மதிப்­பி­லான சாலை மேம்­பாட்டுப் பணி­க­ளுக்­கான ஒப்­பந்­தப்­ புள்­ளியை ரத்து செய்து சென்னை உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத­னால் அதி­முக அர­சுக்கு பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் உயர் ­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்பை திமுக உட்­பட எதிர்க்­கட்­சி­கள் வர­வேற்­றுள்­ளன.

திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின், “மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஊராட்சி மன்­றங்­க­ளின் அனு­மதி இல்­லா­மல் கிராம சாலை மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்கு விடப்­பட்­டுள்ள அதி­முக அர­சின் ஒப்­பந்­தங்­களை ரத்­து­செய்து சென்னை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஆனந்த் வெங்­க­டேஷ் அளித்­துள்ள மகத்­தான தீர்ப்­பினை மன­தார வர­வேற்­கி­றேன்,” என்று கூறி­யுள்­ளார்.

“தொடர்ந்து நடத்­தி­வ­ரும் ஊழல் நிர்­வா­கத்­தின் ஒரு­ கட்­ட­மாக, பஞ்­சா­யத்து அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்றி, தனது கைப்­பா­வை­க­ளாக மாவட்ட ஆட்­சி­யர்­களை ஆக்கி, கொள்­ளை­ய­டிக்க நினைத்த ஊழல் அர­சின் தலை­யில் ஓங்கி வைக்­கப்­பட்­டுள்ள சரி­யான குட்டு,” என்­றும் அவர் தெரி­வித்­தார்

இதே தீர்ப்பை சுட்­டிக்­காட்­டி­யுள்ள டிடிவி தின­க­ரன் எம்­எல்ஏ, அதி­கா­ரத்­தைக் கையில் வைத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வதை இனி­யா­வது பழ­னி­சாமி அரசு நிறுத்த வேண்­டும் என்­றார்.

“அரி­யர்ஸ் தேர்­வு­களில் தேர்ச்சி பெற்றதாக அறி­வித்­தது, வெளி மாநி­லத்­த­வர் தமி­ழக அர­சின் பணி­களில் அமர்த்­தப்­பட்­டது போன்ற விவ­கா­ரங்­களில் தனது தவ­றான முடி­வு­க­ளுக்­காக கடும் கண்­ட­னத்­திற்கு இந்த அரசு ஆளா­னதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். மக்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வதை இனி­யா­வது பழ­னி­சாமி அரசு நிறுத்த வேண்­டும்.” என்­றும் அவர் சொன்னார்.

திரு­வாரூா் மாவட்­டம் மன்­னாா்குடி ஊராட்சி ஒன்­றி­யத்­தைச் சோ்ந்த ஜோதி­மணி கும­ரே­சன், திரு­வண்­ணா­மலை மாவட்­டம் தேவ­நத்­தம் ஊராட்­சித் தலைவா் ரமேஷ், தரு­ம­புரி மாவட்­டம் பொன்­னேரி ஊராட்­சித் தலைவா் அழ­கு­ராஜா உள்­ளிட்ட 100க்கும் மேற்­பட்­ட­வா்­கள் சென்னை உயா்நீ­தி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனுக்­கள் மீது உயர்­நீ­தி­மன்­றம் இந்­தத் தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது.

“சாலை­கள் அமைக்க ஊராட்சி மன்­றங்­க­ளின் ஒப்­பு­தல் தேவை. ஆனால் ரூ.2,369.86 கோடி மதிப்­பி­லான இந்த சாலை அமைக்­கும் திட்­டங்­களை தங்­க­ளுக்கு வேண்­டி­ய­வா்­க­ளுக்கு வழங்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே சட்­ட­ விரோ­த­மான இந்த சாலை அமைக்­கும் ஒப்­பந்­தப்­புள்ளி அறி­விப்­பா­ணையை ரத்து செய்ய வேண்­டும்,” என்று மனு­வில் ஊராட்­சித் தலை­வர்­கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்­கில் தீர்ப்பளித்த நீதி­பதி என்.ஆனந்த்­வெங்­க­டேஷ், ரூ.2,369.86 கோடி மதிப்­பி­லான சாலை மேம்­பாட்டு ஒப்­பந்­தப்­புள்ளி அறி­விப்­பா­ணையை ரத்து செய்ய உத்­த­ர­விட்­டார்.

“இந்த நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட ஒட்­டு­மொத்த ஆவ­ணங்­க­ளைப் பார்க்கையில் ஒப்­பந்தப்­ புள்ளி விவ­கா­ரத்­தில் உள்­ளாட்சி அமைப்­பின் பிர­தி­நி­தி­கள் ஓரங்­கட்­டப்­பட்டு நிதிக்­கான காசோ­லை­யில் கையொப்­பம் இடும்­போது மட்­டும் அவா்க­ளுக்கு விவ­ரம் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

“இது அர­சி­ய­ல­மைப்­பில் கூறப்­பட்­டுள்ள உள்­ளாட்சி அமைப்­பு­களின் திட்­டங்­க­ளுக்கு எதி­ரா­னது,” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!