அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி: பாமக புது நிபந்தனை

அன்­பு­மணி ராம­தா­சுக்கு துணை முதல்­வர் பத­வியை அளிக்க முன்­வ­ரும் கட்­சி­க­ளு­டன் மட்­டுமே கூட்­டணி அமைப்­பது என பாமக தலைமை முடிவு செய்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் தமி­ழக அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் வியூ­கங்­களை வகுக்­கத் தொடங்­கி­யுள்­ளன. இந்­நி­லை­யில் அன்­பு­ம­ணியை முன்­னி­றுத்தி தேர்­தலை எதிர்­கொள்ள பாமக தலைமை திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

திமு­க­வைப் பொறுத்­த­வரை கடந்த ஓராண்­டுக்கு முன்பே சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­கான பணி­களை தொடங்­கி­விட்­டது. தேர்­தல் ஆலோ­ச­கரை நிய­மித்­த­து­டன் தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­புப் பணி­யை­யும் முடுக்­கி­விட்­டுள்­ளது.

இம்­முறை தேர்­த­லில் தனிப்­ பெரும்­பான்­மை­யு­டன் வெற்றி பெறும் பட்­சத்­தில் உத­ய­நி­தி­யை துணை முதல்­வர் ஆக்­க­வேண்­டும் என்­பதே திமுக தலை­மை­யின் விருப்­பம் என்று கூறப்­படும் நிலை­யில், அக்­கட்­சி­யின் தேர்­தல் பணி­களை கவ­னிக்­கும் நிறு­வ­னம் இந்த ஏற்­பாட்­டுக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக பாமக தரப்பில் இருந்து திமுகவுக்கு தூது அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதா­வது, திமுக கூட்­ட­ணி­யில் பாமக இடம்­பெ­றும் பட்­சத்­தில் அன்­பு­ம­ணிக்கு துணை முதல்­வர் பதவி அளிக்­கப்­பட வேண்­டும் என்­பதே பாம­க­வின் ஒரே நிபந்­தனை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டு உள்­ளது.

ஆனால், தேர்­த­லுக்கு முன்பே இவ்­வாறு ஒப்­பந்­தம் செய்­து­கொள்­வ­தில் திமுக தலை­மைக்கு விருப்­ப­மில்லை என்­றும் அந்த ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

“தமி­ழ­கத்­தில் கூட்­டணி ஆட்­சித் தத்­து­வம் இது­வரை வெற்றி பெற்­ற­தில்லை என்­ப­தால் தேர்­த­லுக்கு முன்பே ஒப்­பந்­தம் செய்­து­கொள்ள விரும்­ப­வில்லை,” என திமுக தலைமை கூறி­யுள்­ளது.

திமுக தலை­மை­யில் கூட்­டணி ஆட்சி அமை­யும் என்று அறி­விக்­கப்­பட்­டால் அது தேர்­த­லில் வெற்றி வாய்ப்­பைப் பாதிக்­கும் என அக்­கட்­சித் தலைமை கரு­து­கிறது,” என்று அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்.

அதே­வே­ளை­யில் அதி­மு­க­வு­ட­னும் ரஜினி கட்சி தொடங்­கி­னால் அவ­ரி­ட­மும் கூட்­ட­ணிப் பேச்­சு­வார்த்தை நடத்த பாமக தலைமை திட்­ட­மிட்­டுள்­ள­தாக மற்­றொரு தக­வல் தெரி­விக்­கிறது.

பாம­க­வு­டன் கூட்­டணி அமைக்க திமுக, அதி­முக இரு கட்­சி­க­ளுமே விரும்­பு­வ­தா­க­வும் இம்­முறை கூட்­ட­ணி­யில் மட்­டு­மல்­லாது ஆட்­சி­யி­லும் பங்­கு­பெற பாமக விரும்­பு­கிறது என்­றும் அக்­கட்­சி­யின் அர­சி­யல் ஆலோ­ச­னைக் குழு­வின் தலை­வர் பேரா­சி­ரி­யர் தீரன் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால், இது­வரை எந்­தக் கட்­சி­யு­ட­னும் திமுக பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை என திமுக செய்­தித் தொடர்­பா­ளர் டிகே­எஸ் இளங்­கோ­வன் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே திமுக ஆட்சி அமை­யும் பட்­சத்­தில் அன்­பு­மணி, உத­ய­நிதி ஆகிய இரு­வ­ருமே துணை முதல்­வர்­கள் ஆக வாய்ப்­புள்­ள­தாக மற்­றொரு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஆனால், தேர்தல் நேரத்தில் வாரிசு அர­சி­யலை முன்­வைக்­கக் கூடாது என திமு­க­வின் தேர்­தல் ஆலோ­ச­க­ரான பிர­சாந்த் கிஷோர் வலி­யு­றுத்தி இருப்­ப­தாக தமிழக ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!