ராஜ­ராஜ சோழ­னின் சதய விழாவில் தமிழில் பாராயணம்

தஞ்­சா­வூர்: தஞ்சை மாமன்­னன் ராஜ­ராஜ சோழ­னின் 1035வது சத­ய­விழா நேற்று நடத்­தப்­பட்­டது. இவ்­வி­ழா­வின் முக்­கிய அம்­ச­மாக தமி­ழில் பாரா­ய­ணம் பாடப்­பட்­டது.

பக்­தர்­கள், பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­னர், தமிழ் ஆர்­வ­லர்­கள் உள்­ளிட்ட பல­ரும் தமி­ழில் பெரு வுடை­யா­ருக்கு அர்ச்­சனை செய்­யப்­ப­ட­வேண்­டும் என கோரிக்கை வைத்­தி­ருந்­த­தைத் தொடர்ந்து, அந்த வேண்­டு­கோளை ஏற்று நேற்று தேவா­ரம், திரு­வா­ச­கப் பாடல்கள் பாடப்­பட்­டன.

தஞ்­சா­வூர் பெரிய கோயி­லைக் கட்­டிய ராஜ­ராஜ சோழனின் பிறந்­த­நா­ளான ஐப்­பசி சதய நட்­சத்­தி­ர­தினமான நேற்று 1035வது சதய விழா நடை­பெற்­றது.

விழா­வில் ராஜ­ராஜ சோழ­னின் சிலைக்கு அரசு சார்­பில் தஞ்சை மாவட்ட ஆட்­சி­யர் கோவிந்­த­ராவ் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார்.

பெரு­வு­டை­யா­ருக்கு 42 வகை யான பொருட்­க­ளால் அர்ச்­சனை செய்யப்­பட்டு, தமி­ழில் பாரா­ய­ண­மும் பாடப்­பட்­டது.

விழா­வின் தொடக்­க­மாக நேற்று காலை மங்­கல இசை­யோடு பெரிய கோயி­லில் விழா தொடங்­கி­யது.

தொடர்ந்து, கோயில் பணி­யா­ளர்­க­ளுக்­குப் புத்­தாடை வழங்­கப்­பட்­டது. பின்­னர் தேவா­ரம் நூலுக்கு ஓது­வார்­கள் சிறப்­புப் பூசைகள் செய்து கோயி­லின் உள் பிர­கா­ரத்­தில் ஊர்­வ­ல­மாக வந்து நந்தி மண்­ட­பம் அருகே அமர்ந்து தமி­ழில் பாரா­ய­ணத்­தைப் பாடி­னர்.

தஞ்­சா­வூர் பெரிய கோயிலும் ராஜ­ராஜ சோழன் சிலை­கள் உள்ள இடமும் மின்­னொளி சிந்த அலங்­கா­ரம் செய்­யப்­பட்டு இருந்­தன.

கோயி­லில் பக்­தர்­கள் குறைந்த அளவே தனி­ம­னித இடைவெளி­யு­டன் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

சத­ய­ வி­ழாவில் பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­னரும் இயக்­கத்­தி­னரும் ராஜ­ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரி­யாதை செலுத்­தி­னர். அத்துடன், தஞ்­சா­வூர் நக­ரம் முழு­வ­தும் போலிஸ் பாது­காப்பும் போடப்­பட்டிருந்­தது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று கார­ண­மாக சத­ய­ விழா நடை­பெ­றுமா என்­பது பெரிய கேள்­விக்­கு­றி­யாக இருந்து வந்த நிலை­யில், ­வி­ழா நேற்று ஒரு­நாள் மட்­டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. கொரோனா தடுப்புக்கான பாது காப்பு விதி­முறை­களை முறை­யாகக் கடைப்­பி­டிக்கவும் மாவட்ட ஆட்­சி­யர் அறி­வு­றுத்தி இருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon