நெல்லையில் தட்டுப்பாடு, சென்னையில் கோடைக்காலம் வரை இருப்பு; போராடும் மக்கள்

தண்­ணீர் தட்­டுப் பாடு கார­ண­மாக காலிக் குடங்­க­ளு­டன் ஒரு­பக்­கம் போராட்­டம் நடத்­திய நெல்லை மாவட்ட மக்­கள், இந்­தப் பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக ஒரு நல்ல தீர்வை ஆட்­சி­யர் காண வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

மறு­பக்­கம், ஒவ்­வோர் ஆண்­டும் தண்­ணீர் பிரச்­சி­னை­யால் அவ­திப்­பட்டு வரும் சென்னை மக்­க­ளுக்­குத் தேவை­யான அள­வில் தண்­ணீர் இருப்பு உள்­ள­தாக குடி­நீர் வாரிய அதி­கா­ரி­கள் நல்ல செய்தி யைக் கூறி­யுள்­ள­னர்.

நெல்லை அருகே உள்ள சிதம்­பர நகர்ப் பகு­தி­யில் நெடு நாட்­க­ளாக குடி­நீர்த் தட்­டுப்­பாட்டுப் பிரச்­சினை நிலவி வரு­கிறது.

இந்­தப் பிரச்­சி­னைக்கு ஒரு முடிவு காணும்­படி திரு­நெல்­வேலி ஆட்­சி­யர் விஷ்­ணு­வின் அலு­வல கத்தை நேற்று நூற்­றுக்­க­ணக்­கான பெண்­களும் பொது­மக்­களும் முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர்.

அவர்­கள் தங்­கள் கைகளில் காலிக்­கு­டங்­க­ளை­யும் துண்­டுப் பிர­சு­ரங்­க­ளை­யும் ஏந்­தி­ய­படி தண்­ணீர் கேட்டு முழக்­க­மிட்­ட­னர்.

அதன்­பின்­னர், ஆட்­சி­யர் அலு வலக வாயி­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த கோரிக்கை மனுவைப் போடும் பெட்­டி­யில்­ மக்­கள் பல­ரும் தங்­க­ளது மனுக்­க­ளைப் போட்­டு­ச்சென்­ற­னர்.

அவர்­களில் சிலர் ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் அளித்த மனு­வில், “சிதம்­பர நகர்ப் பகு­தி­யில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்­கும் மேலாக பல்­வேறு தெருக்­க­ளி­லும் குடி­நீர் தட்­டுப்­பாடு நிலவி வரு­கிறது. இது குறித்து மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­தில் முறை­யிட்­டும் எந்த ஒரு நட­வடிக்­கை­யும் எடுக்­க­வில்லை. கால்­வாய்­களும் முறை­யா­கப் பரா­ம­ரிக்­கப்­ப­டா­மல் நோய் பர­வும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

“எங்­கள் பகு­தி­யில் குடி­நீர், தெரு­வி­ளக்கு, கால்­வாய் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­க­ளைச் செய்­து­கொ­டுக்க ஆட்­சி­யர் காலம் தாழ்த்­தா­மல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,” என குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே, சென்னை ஏரி­களில் தற்­போது 7.1 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்­ள­தால் கோடைக் காலத்­தி­லும்­கூட இனி குடி­நீா்த் தட்­டுப்­பாடு ஏற்­ப­டாது என குடி­நீர் வழங்­கல் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை நகர மக்­க­ளின் முக்­கிய குடிநீா் ஆதா­ர­மாக பூண்டி, புழல், செம்­ப­ரம்­பாக்­கம், சோழ­வ­ரம் ஏரி­கள் உள்­ளன. இந்த நான்கு ஏரி­க­ளி­லும் 11.2 டிஎம்சி தண்­ணீரை சேமித்து வைக்­க­லாம்.

கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் இந்த ஆண்டு இரு­ம­டங்கு தண்ணீா் இருப்­ப­தால் சென்னை மக்­க­ளுக்கு தட்­டுப்­பா­டின்றி குடிநீா் விநி­யோ­கம் செய்ய முடி­யும்.

அத்­து­டன், வட­கி­ழக்­குப் பரு­வ­மழை கைகொ­டுக்­கும் என்­ப­தால் வரும் கோடைக்­கா­லத்திலும் சென்­னை­யில் குடி­நீா்த் தட்­டுப்­பாடு ஏற்­பட வாய்ப்­பில்லை என குடிநீா் வாரிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!