‘வெற்றி நடைபோடும் தமிழகம்’: பிரசாரப் பயணத்தில் திமுக, மநீமவை சாடிய முதல்வர்

நாமக்கல்லில் ஆளும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, “ஏழை, எளிய மக்­க­ளைக் காக்­கும் தமி­ழக அர­சுக்கு பொதுமக்­கள் உறு­து­ணை­யாக இருக்­க­வேண்­டும்,” என கேட்­டுக்கொண்­டார்.

அடுத்­தாண்டு ஏப்­ரல் அல்­லது மே மாதத்­தில் நடக்­கவுள்ள சட்­ட­மன்­றத் தேர்­தலை முன்­னிட்டு அர­சி­யல் கட்­சி­க­ளின் சூடு பறக்­கும் தேர்­தல் பிர­சா­ரம் களை கட்­டத் தொடங்கி உள்­ளது.

அர­சி­யல் களத்­தில் முக்­கிய அங்­கம் வகிக்­கும் அதி­முக, திமுக, மநீம உள்­ளிட்ட கட்­சி­கள் ஒன்றை ஒன்று சாடி வருகின்­றன.

இந்­நி­லை­யில், கடந்த 19ஆம் தேதி தனது சொந்த தொகு­தி­யான எடப்­பா­டி­யில் இருந்து தனது முதற்­கட்ட பிர­சா­ரத்தை ஆரம்பித்த முதல்­வர், நேற்று நாமக்­கல் மக்­க­ளுக்கு புத்­தாண்டு, தைப் பொங்­கல் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து, தனது இரண்­டாம் கட்ட தேர்­தல் பிர­சா­ரத்தை தொடங்­கி­னார்.

தமி­ழ­கம் மீட்­போம் என்ற பெய­ரில் திமு­க­வும் தமி­ழ­கத்தை சீர­மைப்­போம் என்ற பெய­ரில் மக்­கள் நீதி மய்­ய­மும் ஏற்­கெ­னவே பிர­சா­ரத்தை தொடங்­கி­யுள்ள நிலை­யில், ‘வெற்றி நடை­போ­டும் தமி­ழ­கம்’ என்ற பெயரில் நாமக்­கல், திருச்சி மாவட்­டங்­களில் முதல்வரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

முதல்வரின் மூன்று நாள் தொட­ரும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கூறு­கை­யில், “நாமக்­கல் மாவட்­டம் தனக்கு ராசி­யான மாவட்­டம்,” என்றவர், “பொங்­கல் பரிசு டோக்­கனை அதி­மு­க­வி­னர் வழங்­கு­வ­தாக ஸ்டா­லின் கூறி­யது பொய்­யான குற்­றச்­சாட்டு.

“பொங்­கல் பண்­டி­கையை மக்­கள் சிறப்­பா­கக் கொண்­டாடும் வகையில் மலிவு விலைக் கடை பணி­யா­ளர்­கள் மூலம் ரூ.2,500 வழங்­கப்­ப­டு­கிறது,” என்றார்.

“தமி­ழ­கத்­தில் கூட்­டணி ஆட்சி கிடை­யாது. கூட்­டணி அமைச்ச ரவையை தமிழக மக்களாலும் அதிமுகவினராலும் ஏற்கமுடி­யாது,” என்று கூறி பாஜ­க­வின் பேச்­சு­களுக்கு முதல்வர் பழனிசாமி முற்­றுப்­புள்ளி வைத்­தார்.

திமுக பொதுச் செய­லா­ளர் துரைமு­ரு­கன் அதி­முக ஒரு ஊழல் கட்சி என்று விமர்­சித்துள்ள நிலை­யில், தேர்­த­லின்­போது பணப்­பட்­டு­வாடா புகா­ரில் சிக்­கிய துரை­மு­ரு­கன் அதி­மு­கவை விமர்­சிக்­க­லாமா என்று முதல்­வர் கேள்வி எழுப்­பி­னார்.

அதி­முக மீது குற்­றம் சுமத்­தும் துரை­மு­ரு­கன் தனது சொத்து விவ­ரங்­களை வெளி­யி­டத் தயாரா என வின­விய முதல்வர், தான் வெளி யிடத் தயார் எனவும் கூறி­யுள்­ளார்.

“திமு­க­வில் வாரிசு அர­சி­யல் நடந்து வரு­கிறது. உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு தலை­வ­ராக என்ன தகுதி இருக்­கிறது என்று கேட்டுள்ள முதல்­வர், திமுக கட்சி அல்ல. அது ஒரு வர்த்­தக நிறு­வ­னம்,” எனவும் விமர்­சித்தார்.

நடி­கர் கமல்­ஹா­சன் 70 வயது வரை நடித்­து­விட்டு ஓய்வு பெறும் வய­தில் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருப்­ப­தா­கக் கூறிய முத­ல்வர், “கமல் நடிப்­பில் வேண்­டு­மா­னால் நாய­க­னாக இருக்­க­லாம். ஆனால், அர­சி­ய­லில் அவர் பூஜ்­ஜியம்­தான்,” என்­றும் குறிப்­பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!