பன்றிகளைப் பிடித்து நிறுத்தும் புதிய போட்டியும் இளையர்களின் விளக்கமும்

தமி­ழ­கத்­தில் பொங்­கல் பண்­டி­கையை ஒட்டி நடை­பெ­றும் ஜல்­லிக்­கட்டு போட்­டி­யைப் போன்று தேனி மாவட்­டத்­தில் பன்றிபிடி போட்­டி நடந்துள்ளது.

காளை­க­ளுக்கு மாற்­றாக பன்றி­க­ளைக் களத்­தில் இறக்கி விட்டு போட்­டி­யில் ஆர்­வம் காட்டி உள்ளனர் இளை­ஞர்­கள். ­

தேனி மாவட்­டத்­தில் அமைந்­துள்­ளது குற­மகள் வள்­ளி­ந­கர் குடி­யி­ருப்பு. இங்­கு­தான் கழி­வு­களி­லும் அழுக்கு­க­ளி­லும் புரண்டு திரியும் பன்­றி­களைக் கட்டித் தழு­வும் வினோத பன்றிபிடி போட்டி நடந்துள்­ளது.

இப்போட்டி குறித்து அப்­ப­குதி மக்­கள் தெரி­விக்­கை­யில், “உழவுத் தொழிலுக்கு காளை மாடு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது அனை­வ­ரும் அறிந்­ததே. ஆனால், சங்­க­கா­லத்­தில் விவ­சாய உழ­வுக்­கு காளை­க­ளுக்கு முன்­னர் பன்­றி­கள்தான் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

“இதற்­கான ஆதா­ரம் புற­நா­னூற்­றின் பாடாண் திணை­யில் உள்­ள­து. இதனை மைய­மாக வைத்­து­தான் பன்­றி­பிடி போட்­டியை நடத்தினோம்,” என்றனர்.

ஜல்­லிக்­கட்­டு போட்டியைப் போலவே இதற்­கும் பல்­வேறு கட்டுப்­பா­டு­களும் விதிமுறை­களும் உள்ளன. சுமார் 70 முதல் 100 கிலோ எடை­கொண்ட பன்­றி­கள் மட்­டுமே போட்­டி­யில் கலந்­து­கொள்ள தகுதி உடை­யவை.

வாடி­வா­சல் போலவே, ஆரம்­பக்­கோட்­டில் இருந்து அவிழ்த்­து­வி­டப்­படும் பன்­றியை எல்­லைக்­கோட்டை நெருங்­காத வண்­ணம், அதன் பின்­னங்­காலை மட்­டுமே பிடிக்­க­வேண்­டும்.

சுமார் 80 கிலோ­வுக்கு மேல் இருக்­கும் பன்­றி­யின் பின்­னங்­கா­லைப் பிடித்­தால், அது பிடிப்­போ­ரை­யும் சேர்த்து இழுத்­துச் செல்­லும். அத­னை­யும் மீறி பன்­றி­யைப் பிடித்து நிறுத்­து­ப­வர்­களே வெற்றி­யா­ளர்­க­ளாகக் கரு­தப்­ப­ட்டு ­பரிசளிக்கப்படுகிறார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!