கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல் அறிவிப்பு

வர­வி­ருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமு­க­வு­டன் காங்­கி­ரஸ் கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யி­டும் என்­றும் கூட்­ட­ணி­யின் முதல்­வர் வேட்­பா­ளர் மு.க. ஸ்டா­லின் என்­றும் ராகுல் காந்தி அறி­வித்­துள்­ளார்.

மூன்று நாள் தேர்­தல் பிர­சா­ரம் செய்­வ­தற்­காக தமி­ழ­கம் வந்த ராகுல், கோவை, ஈரோடு, திருப்­பூர், கரூர் மாவட்­டங்­களில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். இறுதி நாளான திங்­கட்­கி­ழமை (நேற்று முன்­தி­னம்) கரூ­ரில் பிர­சா­ரம் செய்த பின்­னர் அர­வக்­கு­றிச்­சி­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­துப் பேசினார் அவர்.

அப்­போது, “திமுக-காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் மு.க.ஸ்டா­லினை முதல்­வர் வேட்­பா­ள­ராக ஏற்­கி­றோம். காங்­கி­ரஸ்-திமுக உறவு வலு­வாக உள்­ளது. திமு­க­வு­டன் நல்­லு­றவு தொடர்­கிறது,” என்­றார். மேலும், மு.க.ஸ்டா­லின் மீதும் மறைந்த திமுக தலை­வர் கரு­ணா­நிதி மீதும் தாம் மிகுந்த மரி­யாதை வைத்­துள்­ள­தா­க­வும் ராகுல் கூறி­னார்.

இந்­நி­லை­யில், ராகு­லின் அறி­விப்பை வர­வேற்று திமுக தலைமை டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

“தமி­ழ­கத்­தில் எங்­கள் கூட்­ட­ணி­யின் முதல்­வர் வேட்­பா­ளர் ஸ்டா­லின்,” என ராகுல் பேசிய செய்­தியை அந்த டுவிட்­ட­ரில் திமுக இணைத்­துள்­ளது. இரு­த­ரப்­பி­லும் நிகழ்ந்­துள்ள சம்­ப­வங்­க­ளால் தமி­ழ­கத்­தில் திமுக, காங்­கி­ரஸ் கூட்­டணி உறு­தி­யாகி உள்­ள­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!