தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன்

1 mins read
de991a13-5bbc-4bb6-9497-7225cb4b0432
திரு சண்முகம் (வலம்) நேற்று ஓய்வு பெற்றதால் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப் பட்டுள்ளார். படங்கள்: ஊடகம் -

தமி­ழ­கத்­தின் புதிய தலைமை செய­ல­ராக, ராஜீவ் ரஞ்­சன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

தற்­போதை தலைமைச் செய­லர் சண்­மு­கத்­தின் பதவி நீட்­டிப்பு காலம் நேற்று நிறை­வ­டைந்­தது. புதிய தலைமைச் செய­ல­ராக மூத்த ஐஏ­எஸ் அதி­காரி ஹன்ஸ் ராஜ்­வர்மா உட்­பட பலர் முயற்சி மேற்­கொண்­ட­னர்.

ஆனால் தமி­ழக அர­சின் வேண்­டு­கோளை ஏற்று மத்­திய அரசின் பணி­யில் இருந்த மூத்த ஐஏ­எஸ் அதி­காரி ராஜீவ் ரஞ்­சன், அப்­ப­ணி­யில் இருந்து விடு­விக்­கப்­பட்டு மாநில பணிக்கு அனுப்­பப்­பட்டு உள்­ளார். இதை­ய­டுத்து தமி­ழ­கத்­தின் புதிய தலைமைச் செய­ல­ராக ராஜீவ் ரஞ்­சன் நிய­மிக்­கப்பட்­டுள்­ளார். இதற்­கான உத்­த­ரவை தமி­ழக அரசு நேற்று பிறப்­பித்­தது.

இவர், மத்­திய மீன்­வ­ளம் கால்­நடை, பால்­வ­ளத்­துறை செய­ல­ராக பதவி வகித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே முதல்­வர் பொறுப்­பில் உள்ள நெடுஞ் சாலைத்­துறை செய­ல­ராக ராஜீவ் ரஞ்­சன் நீண்ட காலம் பணி­யாற்­றி­ய­வர். இவ­ரும் வரும் செப்­டம்­பர் மாதத்­து­டன் ஓய்வு பெற­வுள்­ளார். தமி­ழக அர­சின் தலை­மைச்­செ­ய­லா­ளர் பொறுப்­பில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சண்­மு­கம், தமி­ழக அரசின் ஆலோ ­ச­க­ராக ஓராண்டு காலத்­திற்கு நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார்.