எட்டு மாதங்களுக்கு ரூ.165,814 கோடி வட்டி செலுத்திய தமிழக அரசு

சென்னை: தமி­ழக அரசு வாங்­கி­யுள்ள கட­னுக்­காக கடந்த எட்டு மாதங்­களில் மட்­டும் 165,814.52 கோடி ரூபாய் வட்­டி­யா­கச் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் 2020-21ஆம் நிதி­யாண்­டில் செலுத்­த­வேண்­டிய வட்­டித் தொகை 36,311.47 கோடி ரூபாய் என்­றும் இதில் கடந்த நவம்­பர் வரை ரூ.14,181.51 கோடி மட்­டுமே செலுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் தமி­ழக அர­சின் கடன் மற்­றும் வட்டி நில­வ­ரம் குறித்து மத்­திய தலைமை நிதித் தணிக்­கை­யா­ளர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை அனை­வ­ரை­யும் அதிர்ச்சி அடைய வைத்­தி­ருப்­ப­தாக மதுரை மக்­கள் விழிப்­பு­ணர்வு அறக்­கட்­டளை தெரி­வித்­துள்­ளது.

தமி­ழக அர­சின் வரவு, செலவு விவ­ரங்­க­ளைப் பார்த்­த­போது கடும் அதிர்ச்சி ஏற்­பட்­ட­தாக அந்த அறக்­கட்­ட­ளை­யின் நிறு­வ­னர் ஹக்­கீம் தெரி­வித்­துள்­ளார்.

செலுத்த வேண்­டிய வட்­டித் தொகையே பல ஆயி­ரம் கோடி­க­ளாக இருக்­கிறது என்­றால் வாங்­கிய கடன் தொகை எவ்­வ­ளவு இருக்­கும் எனும் மலைப்பு ஏற்­ப­டு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

"தமி­ழக அரசு பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வாங்­கி­யுள்ள கடன்­க­ளுக்குத் செலுத்­த ­வேண்­டிய வட்­டித்­தொகை 2020-21ஆம் நிதி­யாண்­டில் 278 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது. அரசு பெறும் கடன்­க­ளுக்கு குறைந்த அளவு வட்­டியே வசூ­லிக்­கப்­பட்­டா­லும் இந்த அள­வி­லான வட்­டித்­தொகை அதிர்ச்சி தரு­கிறது.

"வரும் மார்ச் மாதத்­துக்­குள் தமி­ழக அரசு நடப்பு நிதி­யாண்­டுக்­கான வட்­டித்­தொ­கை­யில் மீத­முள்ள ரூ.22,129 கோடி­யைச் ­செ­லுத்­த­வேண்டி உள்­ளது என்று ஹக்­கீம் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

பல்­வேறு கடன்­க­ளுக்­காக அரசு செலுத்­தி­யுள்ள வட்­டித் தொகையை வைத்து தமி­ழ­கத்­தில் உள்ள ஒவ்­வொரு குடும்ப அட்­டை­தா­ர­ருக்­கும் ரூ.73,972 வழங்­கி­யி­ருக்க முடி­யும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், திட்­டங்­க­ளுக்­குச் செலவு செய்­வதை விட வட்­டித் தொகைக்­கு­த்தான் அரசு அதி­கம் செல­வி­டு­கிறது என்று கூறி­யுள்­ளார்.

"2019-20 நிதி­யாண்­டில் தமி­ழ­கத்­தில் மக்­கள் நலத் திட்­டங்­க­ளுக்­காக செல­வி­டப்­பட்ட தொகை ரூ.20,146.77 கோடி. ஆனால் அதே கால­கட்­டத்­தில் கட­னுக்­காக செலுத்­திய வட்­டித் தொகை ரூ.31,980.19 கோடி. இதே நிலை நீடித்­தால் தமி­ழக அர­சின் நிதி நிலைமை மேலும் மோச­ம­டை­யும்," என மதுரை மக்­கள் விழிப்­பு­ணர்வு அறக்­கட்­டளை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!