கொரோனா தரவுகள்; முழு ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் எண்ணிக்கை சரிபார்க்கப்படுகிறது

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட் நில­வ­ரம் குறித்து முழு­மை­யாக ஆய்வு மேற்­கொள்ள சுகா­தார அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

குறிப்­பாக, கொவிட் 19 நோய்க்கு பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை சரி­பார்க்­கப்­பட வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்தி உள்­ள­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்த ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளின்­போது தற்­போது கிரு­மித் தொற்று பாதிப்­புக்கு சிகிச்சை பெறு­வோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­யோர் எண்­ணிக்­கை­யும் சரி­பார்க்­கப்­படும்.

இது­வரை பதிவு செய்­யப்­பட்­டுள்ள இறப்பு எண்­ணிக்கை உள்­ளிட்ட அனைத்து விவ­ரங்­க­ளை­யும் ஆய்வு செய்­வ­தன் மூலம், கொரோனா பாதிப்­பின் சரி­யான நில­வ­ரம் தெரிய வரும் என்­றும் அதன்­மூ­லம் நோய்த்­த­டுப்பு, தொற்று மேலாண்மை தொடர்­பில் சரி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­ முடியும் என்றும் தமி­ழக அரசு கரு­து­வ­தாக அச்­செய்தி தெரி­விக்­கிறது.

தமி­ழக சுகா­தார மற்­றும் நக­ராட்­சி­க­ளின் மூத்த அதி­கா­ரி­க­ளு­டன் அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

அப்­போது கொரோனா விவ­காரம் தொடர்­பில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் பிறப்­பித்த உத்­த­ர­வு­களை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் விவ­ரித்­தார்.

மேலும், கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர், உயி­ரி­ழந்­தோர் தொடர்­பான எண்­ணிக்­கை­யைப் பதிவு செய்­யும்­போது தவ­றான தக­வல்­கள் இடம்­பெ­றக்­கூ­டாது என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!