டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல்

தூத்­துக்­குடி: டிசம்­பர் மாதத்­திற்­குள் நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்­தல் நடத்­து­வ­தற்­கான பணி­கள் தொடங்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் கே.என்.நேரு தெரி­வித்­தார். தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் நடை­பெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி­களை நேற்று ஆய்வு செய்­த அவர், செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளிக்­கை­யில், "முந்­தைய ஆட்சி காலத்­தில் தொடங்­கப்­பட்ட பாதா­ளச் சாக்­க­டைத் திட்­டப் பணி­கள் முடிக்­கப்­ப­டா­மல் உள்­ளன. அவற்றை விரை­வாக முடிக்­கும் நோக்கில் பல்வேறு இடங்­க­ளி­லும் தொடர்ந்து ஆய்­வு­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

"அதன்­படி தூத்­துக்­குடி மாந­க­ரில் நடை­பெற்று வரும் பாதாள சாக்­கடை திட்டப் பணி­களையும் உள்­ளாட்­சித் துறை வளர்ச்­சித் திட்­டப் பணி­க­ளை­யும் இன்று ஆய்வு செய்­துள்­ளோம். தூத்­துக்­கு­டி­யில் மழை­நீர் தேங்­கு­வதை தவிர்க்­க­வும் சாலை­களை சீர்­செய்­தி­ட­வும் திட்­டப்­ப­ணி­கள் விரி­வுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

"நவம்­பர், டிசம்­பர் மாதத்­திற்­குள் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்துமாறு முதல்வர் கூறியுள்ளார். தற்­போது நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான அடிப்­ப­டைப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. மாநில அர­சின் பரிந்­து­ரை­யின் பேரில் தமி­ழ­கத்­தில் சில பேரூ­ராட்­சி­கள் நக­ராட்­சி­க­ளாக தரம் உயர்த்­தப்­பட உள்­ளன.

"திமுக தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யதுபோல சில நக­ரங்­கள், மாந­க­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­பட உள்­ளன. இதற்­கான அறி­விப்­பு­களை முதல்­வர் வெளி­யி­டு­வார்," என்றார் கே.என். நேரு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!