சமோசாவால் வாக்குவாதம்; ஒருவர் உயிரிழப்பு

அனுப்­பூர்: சமோசா விலை உயர்வு குறித்த வாக்­கு­வா­தத்­தால் கடை­யின் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் உயிரை மாய்த்­துக்கொண்­டுள்ள அவ­லம் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் நடந்­துள்­ளது.

மத்­தி­யப் பிர­தே­சத்­தின் அனுப்­பூர் நக­ரில் உள்ள ஒரு கடை­யில் பஜ்ரு ஜெய்ஸ்­வால் என்­ப­வர் தனது இரு நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து சமோசா வாங்­கிச் சாப்­பிட்டு உள்­ளார்.

அப்­போது அந்­தக் கடைக்­கா­ரர் கஞ்­சன் சாகு என்­ப­வர், பண­வீக்­கத்­தி­னால் சமோ­சா­வின் விலை உயர்ந்துவிட்­ட­தா­க­வும் இத­னால் இரு சமோ­சாக்­க­ளின் விலை ரூ.15க்கு பதி­லாக ரூ.20க்கு விற்­கப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

இதனை ஏற்க மறுத்து ஜெய்ஸ்­வால் வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார். இது­பற்றி கடைக்­கா­ரர் போலி­சில் புகார் அளிக்க, போலி­சார் ஜெய்ஸ்­வா­லி­டம் விசா­ரித்தனர். மறுநாளும் கடைக்கு வந்து சண்டை போட்ட ஜெய்ஸ்­வால், தனது உயிரை தீவைத்து மாய்த்துக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!