‘விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது’

சென்னை: விஜய் மக்­கள் இயக்­கம் கலைக்­கப்­பட்டு விட்­ட­தாக நடி­கர் விஜய்­யின் தந்­தை­யும் இயக்­கு­ந­ரு­மான எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் சென்னை உரி­மை­யி­யல் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

தனது பெய­ரைப் பயன்­படுத்தி கூட்­டங்­களை நடத்த தந்தை எஸ்.ஏ. சந்­தி­ர­சே­கர், தாய் ஷோபா உள்­ளிட்ட விஜய் மக்­கள் இயக்க நிர்­வா­கி­க­ளுக்­குத் தடை விதிக்க வேண்­டும் என விஜய் தரப்­பில் சென்னை உரி­மை­யி­யல் நீதி­மன்­றத்­தில் மனுத்தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கு விசாரணை நீதி­மன்­றத்­தில் நடந்துவந்த நிலை­யில், இதுதொடர்­பான பதில் மனுவை இயக்­கு­நர் எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் தாக்­கல் செய்­தார். அதில் விஜய் மக்­கள் இயக்­கம் கலைக்­கப்­பட்டு விட்­ட­தாக அவர் கூறியுள்­ளார்.

"விஜய் மக்­கள் இயக்­கம் தற்­போது இல்லை. ரசி­கர்­க­ளா­கவே இருப்­பது போல் நினைத்­துக்­கொண்டு தொடர்­கின்றனர்," என்று தெரி­வித்துள்ளார்.

இந்த வழக்கு விசா­ரணை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி ­வைக்­கப்­பட்டது.

இந்­நி­லை­யில், "எஸ்.ஏ. சந்­தி­ர­சே­கர் உரு­வாக்­கிய விஜய் மக்­கள் இயக்­கம் மட்­டுமே கலைக்­கப்­பட்­டுள்­ளது. எனது தலை­மை­யில் இயங்­கும் விஜய் மக்­கள் இயக்­கம் கலைக்­கப்­ப­ட­வில்லை. இப்போதும் இருக்கிறது," என விஜய் தரப்­பில் விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடும் நிலையில், விஜய் மக்­கள் இயக்­கம் கலைப்பு என்ற செய்தியால் குழம்பிப்போன நிர்வாகிகளும் ரசிகர்களும் விஜய் தரப்பு வெளியிட்ட அறிவிப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!