5 வானொலி நிலையங்கள் முடக்கம்: பாமக எதிர்ப்பு

சென்னை: தமி­ழ­கத்­தின் பன்­மு­கத்­தன்­மையை எதி­ரொ­லிக்­கும் வானொலி நிலை­யங்­க­ளின் நிகழ்ச்­சி­களை முடக்­கு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று பாமக இளை­ய­ர­ணித் தலை­வர் அன்­பு­மணி தெரி­வித்­துள்­ளார்.

மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புது­வை­யில் உள்ள வானொலி நிலை­யங்­க­ளின் சொந்த நிகழ்ச்­சித் தயா­ரிப்பை இம்­மா­தத்­து­டன் முடக்க பிரச்­சார் பாரதி நிறு­வ­னம் முடிவு செய்­தி­ருப்­ப­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல் அதிர்ச்சி அளிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் சென்னை வானொலி நிலை­யத்­துக்கு அடுத்­த­தாக, அதிக அள­வில் நிகழ்ச்­சி­க­ளைத் தயா­ரித்து ஒலி­பரப்­பு­வது இந்­நான்கு வானொலி நிலை­யங்­கள்­தான். இனி வாரம் ஒரு நாள் மட்­டுமே இந்­நி­லை­யங்­கள் சொந்­த­மாக நிகழ்ச்­சி­க­ளைத் தயா­ரித்து ஒலி­ப­ரப்­பும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இம்­மு­டிவு மண்­டல வானொலி நிலை­யங்­கள் எந்த நோக்­கத்­துக்­காக உரு­வாக்­கப்­பட்­ட­னவோ, அதைச் சிதைத்­து­வி­டும் என தெரி­வித்­துள்­ளார்.

இந்­தியா எவ்­வாறு பன்­மு­கத்­தன்மை கொண்ட நாடோ, அதே­போல் தமி­ழ­க­மும் பன்­மு­கத்­தன்மை கொண்ட மாநி­லம்­தான் என்று குறிப்­பிட்­டுள்ள அன்­பு­மணி, அனைத்­துத் தரப்பு மக்­க­ளா­லும் வெகு­வாக நேசிக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­கள் திடீ­ரென நிறுத்­தப்­ப­டு­வது மக்­களை உள­வி­யல் ரீதி­யாக பாதிக்­கும் என்று கூறி­யுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!