30,000 முகாம்கள்; 33 லட்சம் தடுப்பூசி

சென்னை: கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக கடந்த சில வாரங்­க­ளாக ஞாயி­று­தோ­றும் தமி­ழ­கம் முழு­வ­தும் முகாம்­கள் அமைக்­கப் பட்டு தடுப்­பூசி போடப்­ப­ட்டு வருகிறது. அந்த வகை­யில் இன்றும் அத்­த­கைய மாபெ­ரும் தடுப்­பூசி முகாம் நடை­பெ­று­கிறது.

இதில் இது­வரை இல்­லாத அள­வுக்கு அதிக மக்­கள் பயன் அடை வார்கள் என்று அமைச்­சர் மா. சுப் பிர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி, தேனாம்­பேட்டை மண்­ட­லம், மெரினா கடற்­கரை பகு­தி­யில் இரவு நேரங்­களில் தங்­கும் நரிக்­கு­றவர் சமூக மக்­க­ளுக்கு கொவிட் தடுப்­பூசி செலுத்­தும் சிறப்பு முகாமை மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று பார்­வை­யிட்­டார்.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர், "சென்னை மாந­க­ராட்­சி­யில் இது­வரை 68 லட்­சத்து 56 ஆயி­ரத்து 278 பேருக்கு தடுப்­பூசி போடப்பட்டுள்ளது. 83% பேர் முதல் தவ­ணை­யும் 40% பேர் இரண்­டாம் தவ­ணை­யும் செலுத்தி உள்­ள­னர். தடுப்­பூசி செலுத்­திக் கொண்­ட­தில் தமி­ழ­கத்­தி­லேயே சென்னை மாந­க­ராட்சி முதல் இடத்­தில் உள்­ளது," என்­றார்.

"நாளை (அக்­டோ­பர் 10) நடை­பெ­றும் முகா­மில் அதி­கமானோர் பய­ன­டை­வார்­கள். மக்­கள் அவர் ­க­ளது வீட்­டின் அரு­கி­லேயே நடக்­கும் முகாம்­களில் தவ­றா­மல் கலந்து கொள்ள வேண்­டும்," என்­றும் அவர் நேற்று கூறினார்.

தமி­ழ­கத்­தில் மொத்­த­மாக தடுப்­பூசி செலுத்­திக்கொண்­ட­வர்­கள் எண்­ணிக்­கையை 70 விழுக்­கா­டாக விரை­வில் உயர்த்­தும் வகை­யில் பணி­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

தற்­போது முதல் தவணை தடுப்­பூ­சியை 65 விழுக்­காட்­டி­ன­ரும் இரண்­டா­வது தவணை தடுப்­பூ­சியை 22 விழுக்­காட்­டி­ன­ரும் போட்டு உள்ளனர். கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் மெகா கொவிட்-19 தடுப்­பூசி முகாம் நடை­பெற்­றது. அந்த முகாமில் 28.91 லட்­சம் பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

அதை­ய­டுத்து கடந்த 19ஆம் தேதி நடை­பெற்ற 2வது தடுப்­பூசி முகா­மில் 16.43 லட்­சம் பேரும் 26ஆம் தேதி நடந்த 3வது முகா­மில் 25.04 லட்­சம் பேரும் தடுப்­பூசி போட்­ட­னர். 4வது மெகா தடுப்­பூசி முகாம் கடந்த 3ஆம் தேதி நடை­பெற்­றது. இந்த முகாம்­கள் மூலம் 25 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அந்த வகை­யில் தமி­ழ­கத்­தில் 17 லட்­சத்து 19 ஆயி­ரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டது. தமி­ழ­கம் முழு­வ­தும் 5வது மெகா தடுப்­பூசி முகாம் இன்று நடை­பெறுகிறது. இதில் 30,000 முகாம்­கள் அமைக்­கப்­பட்டு 33 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யின் 200 வார்­டு­களில் மீண்­டும் 1,600 மெகா சிறப்பு தடுப்­பூசி முகாம்­கள் அமைக்­கப்­பட்டு தயா­ராக உள்­ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!