ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்துக்கு ஈடாக அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை

ஸ்ரீவை­குண்­டம்: ஆதிச்­ச­நல்­லூ­ரில் உல­கத்­த­ரம் வாய்ந்த அருங்­காட்சி யகத்தை விரை­வில் அமைப்­ப­தற்கு ஏது­வாக, நேற்று ஞாயிறு முதல் மத்­திய தொல்­லி­யல்­து­றை­யி­னர் அக­ழாய்­வுப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தூத்­துக்­குடி மாவட்­டம், ஸ்ரீவை குண்­டம் அருகே உள்ள ஆதிச்ச நல்­லூ­ரில் பல்­வேறு கட்­டங்­க­ளாக நடத்­தப்­பட்ட அக­ழாய்­வில் முது­மக்­கள் தாழி­கள், மண்பாண்ட பொருட்­கள், இரும்­பா­லான ஆயு­தங்­கள், தங்­கம், வெண்­க­லத்தால் செய்­யப்­பட்ட அணி­க­லன்­கள் உள்­ளிட்ட ஏராளமான அரிய பொருட்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அத்துடன், அண்­மை­யில் ஆதிச்­ச­நல்­லூர், சிவ­களை, கொற்கை ஆகிய இடங்­களில் தமி­ழக அரசு சார்­பில் நடத்­தப்­பட்ட அக­ழாய்­வி­லும் ஏராளமான முது­மக்­கள் தாழி­கள், மண்பாண்ட பொருள்­கள் போன்­றவை கண்­ட­றி­யப்­பட்டு தமி­ழர்­க­ளின் தொன்­மை குறித்து உல­குக்­குப் பறைசாற்­றின.

இந்நிலையில், ஆதிச்­ச­நல்­லூ­ரில் உல­கத்­த­ரம் வாய்ந்த அருங்காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும் என்று மத்­திய அரசு அறி­வித்திருந்தது. இதை யடுத்து அருங்காட்சியக த்ம்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

இது­கு­றித்து மத்­திய அக­ழாய்­வுத் துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், "தென்­னிந்­தி­யா­வி­லேயே உல­கத்­த­ரம் வாய்ந்த அருங்­காட்சியகம் முதன்­மு­த­லாக ஆதிச்ச நல்­லூ­ரில்­தான் அமைக்­கப்­பட உள்­ளது. இங்கு இது­வரை எடுக்­கப்­பட்ட அனைத்­துப் பொருட்­களும் அருங்­காட்­சி­ய­கத்­தில் பார்­வைக்கு வைக்­கப்­படும்.

"அத்­து­டன், அக­ழாய்வு நடந்த பகு­தி­க­ளின் மேல் கண்­ணா­டி­யா­லான தரைத்­த­ளம் அமைத்து, அதன்மீது சுற்­று­லாப் பய­ணி­கள் நடந்து சென்று அக­ழாய்வு நடந்த பகு­தி­க­ளைப் பார்க்­கும் வகை­யில் அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும்," என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!