தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை; மக்களைக் காக்க மீட்புப் படையினர் ஆயத்தம் கனமழை: 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை; மக்களைக் காக்க மீட்புப் படையினர் ஆயத்தம் கனமழை: 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

2 mins read
f68ff8a0-4b07-40e4-a21f-dd6b649ab3f0
காற்றழுத்த தாழ்வு நிலையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, சோழவரம், அலமாதி, செங்குன்றம், புழல், மாதவரம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். படம்: ஊடகம் -

சென்னை: வங்­கக் கட­லில் உரு­வான குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி, தற்­போது ஆழ்ந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகு­தி­யாக வலு­வ­டைந்­துள்­ளதை அடுத்து, தமி­ழ­கத்­தில் இன்று முதல் நான்கு நாட்­க­ளுக்கு கன­மழை பெய்­யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்­துள்­ளது.

சென்னை, திரு­வள்­ளூர், கட­லூர், விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை ஆகிய ஏழு மாவட்­டங்­களும் கன­ம­ழை காரணமாக அதி­க பாதிப்புக்குள்ளா கும் சூழல் உள்ளதால் சிவப்பு எச்­ச­ரிக்­கை­ விடுக்­கப்­பட்­டுள்­ளது.

யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரிக்­கும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்காங்கே இந்த கனமழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

வட­த­மி­ழக கட­லோர மாவட்­டங் களில் தரைக்­காற்று மணிக்கு 50 கிலோ மீட்­டர் வேகத்­தில் வீசக்­கூடும் என­வும் கூறப்­பட்­டுள்­ளது.

குறிப்பாக, பாதிக்கப்படும் ஏழு மாவட்­டங்­க­ளி­லும் நிவாரணப் பணி­களை முடுக்கிவிடும்­படி அமைச்­சர்­க­ளுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிவுறுத்தி உள்­ளார்.

இதை­ய­டுத்து இன்று நடை­பெற விருந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நாளை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்கின்றன.

இந்­நி­லை­யில், தொடர்ச்­சி­யாக கன­மழை பெய்து வரு­வ­தால் 26 மாவட்­டங்­களில் பள்­ளி­கள், கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­களும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­னர்.

சென்­னை­யில் நேற்று செய்தி யாளர்­க­ளைச் சந்­தித்த வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் புவி­ய­ர­சன் கூறு­கை­யில், "சென்­னை­யில் இ­ருந்து 260 கி.மீ. தொலை­வில் தென்­கி­ழக்கு திசை­யில் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் நிலை கொண்­டுள்­ளது. இது புய­லாக வலுப்­பெறா­மல் இன்று காலை சென்­னைக்கு அருகே கரை­யைக் கடக்­கும். அதன்­பி­றகு இன்று மாலையில் மழை குறை­யத் தொடங்­கும்," என்­றார்.

இதற்கிடையே, "கன­ம­ழையை எதிர்­கொள்ள சென்னை மாந­க­ராட்சி தயார் நிலை­யில் உள்ளது. தாழ்­வான பகு­தி­களில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நீர் இறைக் ­கும் மோட்­டார் பம்­பு­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன. தண்­ணீர் தேங்­கும் பகு­தி­களில் பட­கு­களும் தயார் நிலை­யில் உள்­ளன. எதிர்­பார்த்த கன­மழை இது­வரை பெய்­ய­வில்லை. மழை பெய்­தால் உணவு வழங்கத் தயார் நிலை­யில் உள்­ளோம்," என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.