கனமழை, வெள்ளம்; மு.க. ஸ்டாலினைச் சந்தித்து மத்திய குழு ஆலோசனை

சென்னை: தமி­ழ­கத்­தில் மழை, வெள்­ளம் நில­வ­ரத்தை நேரில் ஆய்வு செய்த மத்­திய குழு­வி­னர் நேற்று முதல்­வர் மு.க. ஸ்டா­லி­னைச் சந்­தித்­துப் பேசி­னர்.

வட­கி­ழக்குப் பரு­வ­மழை தொடங்­கி­ய­தி­லி­ருந்து தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் மழை கொட்­டித் தீர்த்­தது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், கன்­னி­யா­கு­மரி உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­களில் பெய்த கன­ம­ழை­யால் சாலை எங்­கும் மழை­நீர் தேங்­கி­யது. விவ­சாய நிலங்­களில் வெள்­ளம் சூழ்ந்­த­தால் பயிர்­கள் அழு­கின.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­திற்கு வந்த மத்­தி­ய குழு­வி­னர் இரண்டு பிரி­வா­கப் பிரிந்து கடந்த மூன்று நாட்­க­ளாக மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில் மத்­திய உள்­துறை இணைச் செய­லா­ளர் ராஜிவ் சர்மா தலை­மை­யி­லான மத்­திய குழு­வி­னர் நேற்று காலை தலைமைச் செய­ல­கத்­தில் முதல்­வ­ரைச் சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.

இதற்­கி­டையே மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் ரேஷன் அட்­டை­தா­ரர்­க­ளுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்­டும் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

"மழை­யால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு 24 ஏக்­கர் நெற்­ப­யி­ருக்கு 40,000 ரூபாய் நிவா­ர­ணம் வழங்க வேண்­டும். மறு சாகு­படி செல­வுக்கு 12,000 ரூபாய் வழங்க வேண்­டும். அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் விலை­க­ளை­யும் தக்­காளி, வெங்­கா­யம் போன்ற காய்­க­றி­க­ளின் விலை­க­ளை­யும் கட்­டுக்­குள் கொண்டு வர வேண்­டும்," என்றும் அவர் கேட்­டுக்கொண்­டார்.

பா.ம.க. நிறு­வ­னர் ராம­தா­சும் கட­லுார் மாவட்­டத்­தில் பெய்த கன­மழை பாதிப்­பால் தேங்கி நிற்­கும் தண்­ணீரை வெளி­யேற்ற போர்க்­கால அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!