422 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைப்பூச வேல்கள் மாயம்

பழநி: கடந்த 422 ஆண்­டு­களாக பழநி மலைக்குப் பாத­யாத்­தி­ரை­யாக சென்று வரும் பக்­தர்­கள், தாங்­கள் கொண்டு வந்த பழமை­மிக்க வேல்­கள் காணா­மல் போய்­விட்­ட­தாகப் புகார் அளித்­துள்ளனர். நத்­தம் அருகே இச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

ஆண்­டு­தோ­றும் தைப்­பூச விழாவை முன்­னிட்டு சிவ­கங்கை மாவட்­டம் செட்­டி­நாடு பகு­தியில் இ­ருந்து நாட்­டுக்­கோட்டை நகரத்­தார் காவடி எடுத்து, வேல் ஏந்தி பாத­யாத்­தி­ரை­யாக பழநி மலைக்குச் செல்­வது வழக்­கம்.

அந்த வேல்­க­ளுக்கு முதலில் பழநி தண்­டா­யு­த­பாணி சுவாமி கோவில் கருவறையில் வைத்து அபி­ஷே­கம் செய்­யப்­படும். அதன் பின்­னர் பக்­தர்­கள் பழனி மலைக்­குப் புறப்­ப­டு­வர்.

அதே­போல் நடப்பு ஆண்­டி­லும் பாத­யாத்­தி­ரை­யைத் தொடங்­கிய பக்­தர்­கள், கடந்த வெள்­ளிக்­கி­ழமை (ஜன­வரி 14) அன்று சமுத்­தி­ரப்பட்டி எனும் ஊரில் தங்­கி­யி­ருந்­த­னர்.

அப்­போது, தாங்கள் கொண்டு வந்த தாமி­ரப் பட்­டை­யால் செய்­யப்­பட்ட இரண்டு வேல்­கள், ஒரு வெள்ளிப் பீடம் உள்­ளிட்ட பொருள்­கள் திடீரென காணா­மல் போனதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பல­மணி நேரம் அவற்றைத் தேடியுள்ளனர். ஆனால் தேட­லுக்­குப் பின்பும் வேல் கிடைக்­க­வில்லை. எனவே புதிய வேல்­க­ளுக்கு பூசை செய்­யப்­பட்டு பக்­தர்­கள் தங்­க­ளது காவடி பாத­யாத்­திரையைத் தொடர்ந்­த­னர். புதி­தாக கொண்டு சென்ற வேல்­களை பழநி தண்­டாயுத­பாணி சுவாமி கோவி­லில் காணிக்­கை­யாக செலுத்­தப் போவ­தா­க­வும் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!