தடைக்குப் பின் தரிசனம்: பழநி கோவிலில் ஒரேநாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல்: ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு பழநஇ மலைக்­கோ­வி­லில் பக்­தர்­கள் சாமி தரி­ச­னத்­துக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, நேற்று முன்­தி­னம் சுமார் மூன்று லட்­சம் பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்­த­னர். ஏரா­ள­மா­னோர் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர்.

கொரோனா தொற்­றுப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த தமி­ழக அரசு பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அமல்­படுத்தி வரு­கிறது.

அந்த வகை­யில், கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை ஐந்து நாள்­க­ளுக்கு வழி­பாட்­டுத் தலங்­களில் பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. நேற்று முன்­தி­னம் தடை நீங்­கி­யதை அடுத்து, பக்­தர்­கள் தரி­ச­னத்­துக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, தைப்­பூச திரு­வி­ழாக் காலம் என்­ப­தால் பழநி மலைக்­கோ­வி­லில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் திரண்­ட­னர். நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்து சாமி தரிசனம் செய்­த­னர்.

தைப்­பூச தேரோட்­டத்­தில் கலந்து­கொண்ட எல்லோருமே நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

எனி­னும், இன்று நடை­பெற உள்ள தெப்­பத்­தேர் உற்­ச­வத்­தில் பக்­தர்­கள் பங்­கேற்க அனு­மதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, திருச்­செந்­தூர் செந்­தி­லாண்­ட­வர் கோவி­லி­லும் புதன்­கி­ழமை பக்தர்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது. ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கட­லில் புனி­த­நீ­ரா­டி­னர்.

இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் திரண்ட பக்தர்கள். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!