செய்திக்கொத்து

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் (படம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறுகையில், "குருசிலாப்பட்டு கிராமத்தில் ஜேசிபி இயந்திரத்தினால் மண்ணைத் தோண்டியபோது புதைபட்டிருந்த இரு சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. உடைந்த நிலையில் இருந்த நடுகல் ஒன்றும் பழமையான சண்டிகேசுவரர் சிற்பமும் கிடைத்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கிடைத்திருப்பது சிறப்புக்குரியது," என்றார். படம்: ஊடகம்

கொள்ளிடத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.150 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தஞ்சாவூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடரும் கட்டுமானப் பணிகளில் 70% முடிந்துள்ள நிலையில், பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உடனடியாக ஆற்றில் குதித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

உசிலம்பட்டியில் கிடா சண்டை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடா சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை மட்டுமின்றி தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 50 ஜோடி கிடாக்களும் பங்கேற்றன.

23 புதிய பூங்காக்கள் அமைக்க முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்களை அமைக்கவும் ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின்கீழ் 28 பணிகளுக்கு ரூ.24.43 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 23 பூங்காக்கள் ரூ.18.48 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. 5 பூங்காக்கள் ரூ.5.95 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், அவை இறுதியானதும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோவை: கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை அங்குள்ள ஒரு கிடங்கில் கடந்த ஐந்து நாள்களாகப் பதுங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. கடந்த ஐந்து நாள்களாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் தவித்து வந்த சிறுத்தை உணவைத் தேடி கூண்டுக்குள் அடைபட்டது. இதையடுத்து, நேற்று அது வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!