‘அனைத்து மக்­க­ளுக்­கும் குடி­நீர் வழங்குவதே இலக்கு’

சென்னை: நாடு முழு­வ­தும் அனைத்து மக்­க­ளுக்­கும் பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­க­வேண்­டும் என்ற இலக்­கு­டன் மத்­திய அரசு செயல்­பட்டு வரு­வ­தாக மத்­திய ஜல்­சக்தி துறை இணை அமைச்­சர் பிர­க­லாத் சிங் பட்­டேல் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை பாஜக தலைமை அலு­வ­ல­க­மான கம­லா­ல­யத்­தில் கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­திய பின்­னர் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் அனைத்து மக்­க­ளுக்­கும் வழங்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­தில் தொடங்­கப்­பட்ட ஜல்­ஜீ­வன் இயக்­கம் சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

குடி­நீர் இணைப்பு இல்­லாத வீடு­க­ளுக்கு குடி­நீர் இணைப்பு வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறிய அவர், 60,000 கோடி ரூபா­யில் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் தமி­ழக அர­சுக்கு உரிய நிதி ஒதுக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறினார்.

ஆனால், இந்த நிதி­யில் இருந்து இதுவரை குறைந்த அளவே தமி­ழக அரசு பயன்­படுத்தி இருப்­ப­தா­கத் தெரி­வித்­த அமைச்சர், தமி­ழக அரசு முழு­மை­யாக இந்த நிதி­யைப் பயன்­படுத்திக்கொள்ள வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!