முதல்­வ­ரின் செயல்­பா­டு­களில் திருப்தி என 85% மக்­கள் கருத்து

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லின் செயல்­பா­டு­கள் திருப்தி அளிப்­ப­தாக 85% மக்­கள் தெரி­வித்­துள்­ள­தாக ஐஏ­என்­எஸ், சி வோட்­டர் ஊட­கங்­கள் நடத்­திய கருத்­துக் கணிப்­பில் தெரியவந்­துள்­ளது.

2021ஆம் ஆண்டு தமிழ்­நாடு, கேரளா, மேற்கு வங்­கம், அசாம், யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரி­யில் சட்­ட­சபைத் தேர்­தல் நடை­பெற்­றது. இதைத்தொடர்ந்து புதிய அர­சு­கள் அமைந்து ஓராண்டு காலம் கடந்துள்ள நிலை­யில், அவற்றின் செயல்­பா­டு­கள் தொடர்­பாக ஐஏ­என்­எஸ், சி வோட்­டர் ஆகியன ஆய்வு ஒன்றை நடத்­தி­ன.

இதில், மு.க.ஸ்டா­லின் செயல்­பா­டு­கள் மிக­வும் திருப்தி என 41% பேரும் திருப்­தி­ என 44% பேரும் தெரி­வித்­துள்­ள­னர். மொத்­தம் 85% பேர் அவரது செயல்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

17%க்கும் குறை­வா­ன­வர்­களே அர­சின் செயல்­பா­டு­களில் திருப்தி இல்லை எனக் கூறி­யுள்­ள­னர்.

அதேபோல், அர­சின் செயல்­பா­டு­கள் மிக­வும் திருப்தி அளிப்பதாக 30% பேரும் திருப்தி என 50% பேரும் தெரி­வித்­துள்­ள­னர். மொத்­த­மாக அர­சின் செயல்­பா­டு­க­ளுக்கு 81% பேர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். 13%க்கும் குறை­வா­ன­வர்­கள் அர­சின் செயல்­பா­டு­களில் திருப்தி இல்லை என கூறியுள்ள­னர்.

தமி­ழக எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி­யின் செயல்­பா­டு­கள் திருப்தி அளிக்­க­வில்லை என 35% பேரும் திருப்தி தரு­வ­தாக 10% பேரும் கூறி­யுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி பிர­த­ம­ராக அமோக ஆத­ர­வு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐஏஎன்எஸ்-சி வோட்­டர் கணிப்பு தெரி­விக்­கிறது.

தமி­ழ­கத்­தில் ராகுல் காந்தி பிர­த­ம­ராக 54% பேரும் மோடி பிர­த­ம­ராக நீடிக்க 32% பேரும் ஆத­ரவு அளித்துள்­ள­தாகவும் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!