தாய்-மகள் இரட்டைக் கொலை: மீனவர் கைது

கன்­னி­யா­கு­மரி: அண்­மை­யில் ஒரு தாயும் மகளும் கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் கொலை செய்­யப் பட்­ட­னர். இந்த இரட்­டைக் கொலைச் சம்­ப­வம் தொடர்­பில் மீனவர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

"ஒரு பெண்­ணைக் கேலி செய்த தாகக் கூறி என்­னைக் கண்­டித்த தால், எரிச்­ச­ல­டைந்த நான் தாய்- மக­ளைக் கொன்று என் கோபத்­தைத் தீர்த்­துக்­கொண்­டேன்," என்று அவர் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், முட்­டம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஆன்றோ சகா­ய­ராஜ். இவ­ரது மனைவி பவு­லின்­மேரி, 48. சகா­ய­ராஜ் துபா­யில் தங்கி வேலை பார்த்து வரும் நிலை­யில், பவு­லின் மேரி வீட்­டில் அவ­ரது தாயார் திரே­சம்­மா­ளும், 90, வசித்து வந்­தார்.

தனது வீட்­டில் தையல் வகுப்பை நடத்­தி­வந்த பவு­லின் மேரி­யும் திரே­சம்­மா­ளும் கடந்த 7ஆம் தேதி கொல்­லப்­பட்டு கிடந்­த­னர். அவர்­கள் அணிந்­தி­ருந்த 15 பவுன் நகை­களும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, ஐந்து தனிப்­படை காவ­லர்­கள் இந்த இரட்­டைக் கொலை, கொள்­ளைச் சம்­ப­வம் குறித்து துப்­ப­றிந்து வந்­த­னர்.

தனிப்­படை காவ­லர்­க­ளின் சோத­னை­யில் பவு­லின் மேரி வீட்­டின் வெளிப்­பு­றத்­தில் ஆண் அணி­யும் ஒரு ஜோடி செருப்­பும் குரங்கு குல்­லா­வும் கிடைத்­தன.

இந்­தப் பொருள்­களை வைத்து நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், கடி­யப்­பட்­ட­ணத்­தைச் சேர்ந்த அமல சுமன், 36, கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரது வாக்­கு­மூ­லத்­தில், "எனக்­குத் திரு­ம­ண­மாகி விட்­டது. எனது மனைவி பிரிந்து சென்­று­விட்­டார். அதன்­பி­றகு நான் சூரப்­பள்­ளத்­தில் வசித்து வரு­கி­றேன். அவ்­வப்­போது கடி­யப்­பட்­ட­ணத்­தில் உள்ள பவு­லின் மேரி வீடு வழி­யா­கச் செல்­வது வழக்­கம்.

"அவ்­வாறு கடந்த 1ஆம் தேதி நான் கடி­யப்­பட்­ட­ணம் சென்று கொண்டு இருந்­தேன். அப்­போது பவு­லின் மேரி­யின் தையல் வகுப்­புக்­குச் சென்­று­விட்டு ஓர் இளம்­பெண் வெளியே வந்­தார். அவரை சீட்டி அடித்து கேலி, கிண்­டல் செய்­தேன். உடனே அந்­தப் பெண் பவு­லின் மேரி­யி­டம் கூறி­னார். பவு­லின் மேரி என்னை அழைத்துக் கண்­டித்­த­தால் சுத்­தி­ய­லால் தாக்கி அவரையும் அவரது அம்மாவையும் கொலை செய்­தேன்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!