கோழிக்கறி வெட்டி பிழைப்பு நடத்தும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

சிவ­கங்கை: கண் பார்வை இல்­லாத ஜாகிர் உசேன் என்ற மாற்­றுத்­தி­ற­னாளி ஒருவர், வாடிக்­கை­யா­ளர்­களின் தேவைக்­கேற்ப கோழி இறைச்­சியை பக்­கு­வ­மாக வெட்­டிக்­கொ­டுத்து பிைழப்பு நடத்தி வரு­கி­றார்.

தனது வரு­மா­னத்­தில் இரு மகன்­க­ளைப் படிக்­க­வைத்­துக் கொண்டு, மனை­வி­யு­டன் வாழ்ந்து வரும் இவர், "கோழி இறைச்சி விற்­ப­னை மூலம் குடும்­பச் செல வுக்கு போது­மான வரு­மா­னம் கிடைக்கிறது. ஆனாலும், மகன்­களைப் படிக்கவைப்­ப­தில்­தான் சிர மத்தை எதிர்­நோக்கி வரு­கி­றேன்.

"தமி­ழக அரசு உத­விக்­க­ரம் நீட்­டி­னால் இந்தப் பார்­வை­யற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­யின் வாழ்­வில் ஒளி பிறக்­கும்," என்­கி­றார் ஜாகிர் உசேன் நெகிழ்ச்­சி­யாக.

சிவ­கங்கை மாவட்­டம், சிங்­கம் புணரி அருகே உள்­ள புழு­திப்­பட்டி கிரா­மத்­தில் இவர் கறிக்­கடை நடத்தி வரு­கி­றார்.

கையில் ஒரு குச்சியுடன்தான் தனது வாழ்க்கை ஓடுவதாகக் கூறும் இவர், இடது கால் பக்­கம் கல்­லாப்­பெட்டி உள்­ளது, வலது கால் பக்­கம் கோழிக்­க­றியை வெட்ட உத­வும் மரக்­கட்டை உள்­ளது என நினைவில் நிறுத்தி கவ­ன­மா­கச் செயல்­படுகிறார்.

கறியை வெட்­டு­வது, காசு வாங்கு­வது என எல்­லாமே அவர்­தான். பார்வையில்லை என்ற சவா­லுக்கு மத்தியில் பர­ப­ரப்­பாக கோழியை வெட்டி விற்பனை செய்து வரும் இவ­ரைப் பற்­றிய காணொளி­ சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வியப்பை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

பார்வை சீரான நிலை­யில் உள்ளவர்கள்கூட காய்­கறி நறுக்­கும்போது சில நேரங்களில் கைக ளில் கத்தியால் வெட்டுபட்டு சிரமப் படுவதுண்டு. ஆனால், கூர்­மை­யான கறிக்­கடை கத்­தியை பார்வை இல்­லாதபோதும் லாவ­க­மாகப் பயன்­ப­டுத்­து­கி­றார் ஜாகிர் உசேன்.

பிரி­யா­ணிக்கா, கோழிக் குழம்புக்கா என வாடிக்கையாளர் களிடம் கேட்டுகேட்டு வெட்­டிக் கொடுக்­கி­றார். பணத்தையும் அதன் அளவு வாரியாக தரம்பிரித்து கல்­லாப்­பெட்­டி­யில் போடு­கி­றார்.

"கல்லூரி செல்லும் மூத்த மகனும் பள்­ளி செல்லும் இளைய மகனும் விடு­முறை நாளில் உதவி செய்­வார்கள். மற்ற நாள்களில் நான் மட்­டுமே வேலைசெய்­வேன். எனக்கு கறிக்­கடைத் தொழில் பழ­கிப்­போ­ன­தால் எல்லாம் அத்­து­ப்படி," என்கிறார் ஜாகிர் உசேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!