வற்றும் நீர்நிலைகள்: தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து

தலைநகர் சென்னைக்கு அதிகளவில் தேவைப்படும் நீர் விநியோகம்

சென்னை: கோடைக்காலம் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தில் மின்சாரத் தேவையும் குடிநீர்த் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தலைநகர் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வறண்டு கிடக்கும் தருவாயில், நாள் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு 107 கோடி லிட்டர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் 100 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதே இதுவரை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் குடிநீர் விநியோகம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அச்சமும் நிலவுகிறது.

தடுப்புகள் சேதமடைந்துள்ளதால் நீர்நிலைகளில் நீரைத் தேக்கும் அளவு குறைவதும் கடும் வெப்பம் காரணமாக குறைவாக இருந்த நீர் ஆவியாவதும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன.

இதுகுறித்து நீர்வளத் துறை (WRD) அதிகாரிகள் கூறுகையில், “கோடைக்கால நீர்த்தேவையைக் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன.

“நீர்வளத் துறையின் புள்ளிவிவரங்கள்படி, சென்னை மாநகரில் உள்ள ஆறு ஏரிகளிலும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 8.040 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. இது ஒட்டுமொத்த நீர்த்தேக்க அளவான 13.213 டிஎம்சியில் 60.85 விழுக்காடு.

“இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. கடந்த ஆண்டு 75 விழுக்காடு இருந்த நீர் இருப்பு இப்போது ஏறக்குறைய 61 விழுக்காடாகக் குறைந்துள்ளது,” என்றனர்.

நீர்வளத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“நடப்பு நிதியாண்டில் (2023-24) தமிழ்நாட்டுக்கு தருவதாக ஆந்திரா ஒப்புக்கொண்ட 12 டிஎம்சி தண்ணீரில் இதுவரை 2.41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

“அண்மையில் தமிழகத்தில் அதிக அளவில் பருவமழை பெய்ததால் ஆந்திரத்திடம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.

“ஆனால், தற்போது வீராணம் ஏரியின் நீர் இருப்பு பூஜ்ஜியத்தை தொட்டுவிட்ட நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் புதிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் குடிநீரைப் பெற்று மாநகரின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

“அதேவேளையில், ஆந்திரப் பிரதேசம் ஏப்ரல் மாதம் முதல் நான்கு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிடும் என்று நீர்வளத்துறை எதிர்பார்க்கிறது. இது வரும் நாள்களில் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!