You are here

உல‌க‌ம்

மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்ட தாய்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு தாய் அவரது எட்டு வயது மகளை சங்கிலியால் கட்டிப் போட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து மலேசியர்கள் பலர் தங்கள் சினத்தை வெளிப் படுத்தியுள்ளனர். ஒரு தாய் தன் மகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதை பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். தன் மகள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்த தால் அதற்குத் தண்டனையாக மகளை இரும்புச் சங்கிலி கொண்டு ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டிப்போட்டதாக 30 வயதான மாது கூறியுள்ளார்.

பள்ளிக்கூடம் மீது விமானத் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்கு தலில் குறைந்தது 20 குழந்தை கள் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப் பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐநா தெரிவித்துள்ளது. அத்தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுகொண்டுள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதி கிராமத்திலுள்ள மூன்று பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்பில் ரஷ்யா மீதும் சிரியா அதிபர் ஆசாத் மீதும் அனைத்துலக நாடுகள் கண்டனம் தெரிவித் துள்ளன.

கொழும்பு- மதுரை விமானச் சேவை

மதுரை: மதுரை நகருக்கும் இலங்கையின் கொழும்பு நகருக்கும் இடையே இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவை தொடங்குகிறது. இதனால் ஏற்கெனவே இரு நகரங்களுக்கு இடையே வழங்கப்பட்ட ‘மிகின்லங்கா ஏர்லைன்ஸ்’ விமானச் சேவை இம்மாதம் 29ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தினமும் மதுரையிலிருந்து இயங்கும்.

மியன்மாரில் முதன் முறையாக ஸிக்கா கிருமி தொற்று

யங்கூன்: மியன்மாரில் முதன் முறையாக ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யங்கூனில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தொலைக்காட்சித் தகவல் தெரிவித்தது. ஸிக்கா கிருமி முதன் முறையாக சென்ற ஆண்டு பிரேசில் நாட்டில் பலருக்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.

இதுவரை 60 நாடுகளில் ஸிக்கா கிருமி பரவியது. இக்கிருமி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்றினால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை களை அது வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள் ளனர்.

பத்து காஜாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

ஈப்போ: பத்து காஜாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதில் 21 ரயில் பெட்டிகள் சாய்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை என்று கூறப்பட்டது. ரயில் ஓட்டுநர்கள் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மலேசியாவில் சிறப்புப் படை

கோலாலம்பூர்: பயங்கரவாத மிரட்டலை சமாளிக்க சிறப்புப் படை ஒன்றை மலேசியா அமைத்துள்ளது. போலிஸ், ஆயுதப் படை, கடல்துறை அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் 170 உறுப்பினர்கள் சிறப்புப் படையில் இடம் பெற்றுள்ளனர். உள்ளூரில் பயங்கரவாத மிரட்டலுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை இந்த சிறப்புப் படையினர் எடுப்பார்கள் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.

‘விஷக் காப்பி’ கொலையாளிக்கு 20 ஆண்டுசிறை

ஜகார்த்தா: காப்பியில் ‘சைனாய்ட்’ விஷத்தைக் கலந்து தமது தோழியைக் கொலை செய்த ஜெசிக்கா குமாலா வோங்சோவுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 28 வயது ஜெசிக்கா தமது தோழியான மிர்னா சலிஹினைத் திட்டமிட்டுக் கொலை செய்தது வழக்கு விசாரணையில் நிரூபணமான தை அடுத்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெசிக்காவின் காதலர் ஒரு போதைபொருள் புழங்கி என்பதால் அவருடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு ஜெசிக்காவுக்கு மிர்னா அறிவுரை கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்; காயமின்றி தப்பிய நால்வர்

கோலா கங்சார்: மலேசியாவில் உள்ள பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவிலிருந்து ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.59 மணிக்கு நிகழ்ந்தது. ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த நான்கு மருத்துவமனை ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர். ஆம்புலன்சின் 80 விழுக்காடு பகுதி தீக்கு இரையானது. அண்மையில் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் இருமுறை தீச்சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இந்த ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராக்காவைக் கைப்பற்ற திட்டம்

வா‌ஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைநகரமாக இயங்கி வரும் சிரியாவின் ராக்கா நகரைக் கூடிய விரைவில் கைப் பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ராக்காவில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களிலேயே நடத்தவேண்டும் என்று அமெரிக்காவின் தற்காப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கத்திய நாடுகளில் பயங் கரவாதத் தாக்குதல்களை நடத்து வது குறித்து ராக்காவில் இருந்தவாறு பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல்களைத் தடுக்க ராக்காவைக் கைப்பற்றுவது அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அகற்றப்பட்ட குடியேறிகள் முகாம்; பரிதவிக்கும் சிறார்

கேலே: பிரான்சின் கேலே நகரில் இருந்த குடியேறிகள் முகாம் அகற் றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த சிறாரின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. பாதிக்கப்பட்ட சிறாரில் பலர் பெற்றோர் துணை இல்லாமல் திண்டாடுவதாக உதவி அமைப்புகள் கவலை தெரி வித்துள்ளனர். பதிவு செய்யப்படாத சிறுவர்கள் திக்குதிசை அறியாது அங்கு மிங்கும் அலைவதாக Doctors Without Borders மருத்துவ அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். முகாமை விட்டு வெளியேறிய குடியேறிகள் அதற்குத் தீ வைத்த தால் அங்கிருந்த பலருக்குத் தங்கள் உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Pages