ஹெங் சுவீ கியட்: நம்பிக்கை தரும் தீபாவளி ஒளியூட்டு விழா

இவ்வாண்டுக்கான தீபாவளி ஒளியூட்டு விழா இன்றிரவு லிட்டில் இந்தியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு
செய்யப்பட்டது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், கலாசார, சமூக, இளையர் துறை துணை
அமைச்சர் எல்வின் டான், மத்திய வட்டார மேயர் டெனிஸ் புவா ஆகியோர் ஒளியூட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக ஒளி அலங்கார மிதவை அமைக்கப்பட்டுள்ளது.

இருளை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டு வருவதே தீபாவளியின் சிறப்பம்சம் என்று தெரிவித்த திரு ஹெங் சுவீ கியட், அதேபோல கொரோனா நெருக்கடிநிலையிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவரும் என்ற நம்பிக்கையை இந்த தீபாவளி ஒளியூட்டு விழா தருவதாக கூறினார்.
தீபாவளியைக் கொண்டாடும் அதே வேளையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்கும்படி திரு ஹெங் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி, மருதாணியிடுதல், சமையல் பயிலரங்குகள் ஆகியவற்றை இணையம் வழி நடத்த பங்காளிகளுடன் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் ஒன்றிணைந்து செயல்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!