மலேசியா வெள்ளம்: ராணுவம் உதவுகிறது

மலேசியா வெள்ளம்: ராணுவம் உதவுகிறது

2 mins read
02eb0b0e-0ce2-4c1d-9645-863a4799ce24
மலேசிய சமூக ஊடகங்களில் நேற்று பல வெள்ள சம்பவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. உடற்குறையாளர் வீட்டில் சிக்கிக்கொண்டது, ஒரு மாது தன் குழந்தையுடன் மீட்கப் படுவதற்காக காரின் பின்புறத்தில் காத்து இருந்தது, கூட்டுரிமை வீட்டுத்தொகுதிக்குள் வெள்ளம் புகுந்து வாகனங்களை மூழ்கடித்தது பலவும் அவற்றில் அடங்கும்.ஷா ஆலம் நகர்ப்பகுதி யில் வெள்ளநீர் இப்படி ஆறு போல் ஓடியது.படம்: தி ஸ்டார் -

மலே­சி­யா­வில் சிலாங்­கூர் உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­களில் கடும் மழை கார­ண­மாக வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தால் ஏறத்­தாழ 14,000 பேர் வேறு இடங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டுள்­ளது.

வெள்­ளத்­தில் இருந்து மக்­களை மீட்கவும் இதர உத­விக­ளைச் செய்­ய­வும் ஆயு­தப்­ப­டை­களும் காவல்­து­றை­யும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாகாங் மாநி­லத்­தில் மட்­டும் மொத்­தம் 5,189 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

சிலாங்­கூ­ரில் பருவ மழை காலத்­தின்­போது எப்­போ­தா­வ­து­தான் இப்­படி நிக­ழும். அங்கு திடீ­ரென வெள்­ளம் ஏற்­பட்­டு­விட்­ட­தால் ஒரே குழப்­ப­மா­கி­விட்­டது என்று பிரதமர் இஸ்­மா­யில் சாஃப்ரி யாக்­கோப் கூறியதாக தி ஸ்டார் தெரி­வித்­தது.

என்­றா­லும் பாகாங், கிளந்­தான் போன்ற மாநி­லங்­களில் ஆண்டு இறு­தி­யில் எப்போ­தும் மழை இருக்­கும். அத­னால் பாதிப்­பு­கள் இருக்­கும் என்று அவர் கூறி­னார்.

நாடு முழு­வ­தும் 5,731 நிவா­ரண நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவை 1.63 மில்­லி­யன் மக்­க­ளுக்கு இடம் கொடுக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மலே­சி­யா­வில் பரு­வ­மழை அக்­டோ­பரில் தொடங்­கி­யது. மார்ச்வரை நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சிய மாமன்­னர் சுல்­தால் அப்­துல்லா அகம்­மது ஷா கோலா­லம்­பூ­ரில் வெள்ள சூழ்­நி­லையை முழங்­கால் அளவு தண்­ணீரில் நடந்து சென்று பார்­வை­யிட்­டார்.

இப்­போ­தைய வெள்ள நிலைமை 1971ல் ஏற்­பட்ட பேரி­டர் அள­வுக்கு இருப்­ப­தாக மாமன்­னர் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், கோலா­லம்­பூர், சிலாங்­கூர், பேராக், பாகாங்­கில் மழை தொட­ரும் என்று மலே­சிய வானிலைத் துறை நேற்று அதி­காலை எச்­ச­ரிக்கை விடுத்­தது.

பல மாநி­லங்­களில் கடும் மழை பெய்­யும் என்று அது ஆரஞ்­சு­நிற எச்­ச­ரிக்­கை­யைப் பிறப்­பித்­தது.

இவ்­வே­ளை­யில், கோலா­லம்­பூர்-கராக் விரை­வுச்­சா­லை­யில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. இத­னால் ஏரா­ள­மான வாக­னங்­கள் சாலை­யி­லேயே தேக்­கம் அடைந்­தன. சமூக ஊட­கங்­கள் வெள்­ளத்­தைக் காட்­டும் சாலை­க­ளின் பல்­வேறு படங்­களை வெளி­யிட்­டன.

மலே­சிய மேற்குக் கடற்­க­ரை­யி­லும் மலாக்கா நீரி­ணை­யி­லும் கடும் மழை­யும் வலு­வான காற்­றும் வீசக்­கூ­டும் என்று சனிக்­கி­ழமை தேசிய நீர்­நிலை கண்­காணிப்பு நிலை­யம் எச்சரித்தது.

சிலாங்­கூ­ரில் வர­லாறு காணாத மழை பெய்து வரு­வ­தால் பல பகு­தி­க­ளி­லும் வெள்­ளம் ஏற்­பட்டு இருப்­ப­தாக அந்த மாநில முதல்­வர் அம்­ரு­தீன் ஷாரி சனிக்­கி­ழமை தெரி­வித்­தார்.