4ஜி தலைவர்: வருங்காலத்திற்கான வழிகாட்டித் திட்டம் உருவாகும்

மக்­கள் செயல் கட்­சி­யின் அடுத்த தலை­மு­றைத் தலை­வர்­கள் அடுத்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் அதற்கு அப்­பாற்­பட்ட காலத்­திற்­கும் உரிய சிங்­கப்­பூ­ருக்­கான வழி­காட்டித் திட்டத்தை விரை­வில் உரு­வாக்­கு­வார்­கள் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

பொரு­ளி­யல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, வீடு, கல்வி இதர துறை­கள் பற்­றிய தொழிற்­சங்­கம், மக்­கள், தனி­யார் துறை ஆகிய பல்­வேறு துறை­க­ளை­யும் சேர்ந்­த­வர்­க­ளின் சிந்­த­னை­க­ளை­யும் கருத்­து­க­ளையும் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் திரட்­டு­வார்­கள் என்றும் திரு வோங் குறிப்­பிட்­டார்.

டௌன்­ட­வுன் ஈஸ்ட்­டில் மே தினப் பேர­ணி­யில் தொழிற்­சங்­க­வா­தி­க­ளி­டம் நிதி அமைச்­சர் நேற்று உரை­யாற்­றி­னார்.

அந்த நிகழ்ச்­சி­யில் நேர­டி­யாக ஏறத்­தாழ 900 பேர் கலந்­து­கொண்­ட­னர். மெய்­நி­கர் ரீதி­யில் கிட்­டத்­தட்ட 1,000 பேர் பங்­கேற்­ற­னர். எவை எவற்றை வேறு­பட்ட முறை­களில் செய்ய வேண்டி இருக்­கிறது என்பது பற்றி தானும் நான்­காம் தலைமுறைக் குழு­வி­ன­ரும் விவா­திக்­கப்­போ­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

மக்­க­ளுக்­காக அர­சாங்­கம் என்ன செய்ய முடி­யும் என்­பதை மட்­டும் புதிய திட்­டம் கொண்­டிருக்­காது. ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்கு என்ன செய்ய முடி­யும் என்­ப­தை­யும் அந்­தத் திட்­டம் உள்­ள­டக்கி இருக்கும் என்றார் திரு வோங்.

"நாம் எல்­லா­ரும் சேர்ந்து செயல்­பட்டு நாம் தோள்­கொ­டுக்­கும் நன்­னெ­றி­க­ளு­டன் கூடிய இன்­னும் சிறந்த ஒரு சமூ­கத்தைச் சாதிக்க அந்­தத் திட்­டம் வழி­வகை செய்யும்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சுருக்­க­மாகச் சொல்­லப்­போ­னால் 'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' என்ற ஒரு திட்டத்தை உரு­வாக்­கு­வதே நமது இலக்கு என்று அவர் கூறி­னார்.

அந்த இலக்கு அடுத்த 10 ஆண்டு­களுக்­கும் அதற்கு அப்­பாற்­பட்ட காலத்­திற்­கும் உரிய வழி­காட்டித் திட்­டத்தை உரு­வாக்­கும் என்­றார் அவர்.

அந்­தத் திட்­டம் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­க­ளின் மிக முக்­கிய முயற்­சி­யாக இருக்­கும் என்று கூறிய அவர், திட்­டம் விரை­வில் முறைப்­படி தொடங்­கப்­படும் என்­றார். புதிய திட்­டத்­திற்குத் தொழிற்­சங்க இயக்­கத்­தின் முழு ஈடு­பா­டும் ஆத­ர­வும் தேவை என்று திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

தொழிலாளர் இயக்­க­மும் முத்­த­ரப்பு உற­வும் பல ஆண்டு கால­மாக சிங்­கப்­பூர் வெற்­றி­யின் முது­கெ­லும்­பா­கத் திகழ்ந்து வந்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார். முத்­த­ரப்பு உற­வின் முக்­கி­யத்­து­வம் பற்­றி­யும் தனது உரை­யில் திரு வோங் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

"நான் என்­ பெற்­றோரை­விட சிறந்த நிலையை எட்­டி­னேன். அடுத்த தலை­மு­றை­யும் அதே போல மேம்­பட வேண்­டும் என்­பதை உறு­திப்­ப­டுத்­த வேண்டும்.

"இதுவே நான்­காம் தலை­முறைத் தலை­வர்­களின் விருப்­ப­ம். என் விருப்பமும் இதுதான்," என்று நிதி அமைச்சர் கூறி­னார்.

உள்­ளூ­ரி­லும் உல­க­ளவி­லும் சவால்­கள் இருக்­கும் என்­றா­லும் கடந்த இரண்­டாண்­டு­களில் கிடைத்த அனு­ப­வம் தனக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!