புத்தாக்கத்துடன் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கு புகழாரம்

சிங்­கப்­பூ­ரில் வீடு­க­ளி­லும் சமூ­கத்­தி­லும் ஆங்­கில நாட்­டம் அதி­க­ரிக்­கிறது. இந்­தச் சூழ­லில் இன்­றைய பன்­மொழி, பன்­முக சமூ­கத்­தில் தாய்­மொழி கற்­ப­தைப் பொருள்­பொதிந்­த­தா­க­வும் ஏற்­பு­டை­ய­தா­க­வும் நாட்­ட­மிக்­க­தா­க­வும் ஆக்­கு­வது என்­பது ஒரு சவால்.

இந்­தச் சவாலை புதுப்­புது தொழில்­நுட்­பங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட புத்­தாக்­கங்­க­ளின் மூலம், தமி­ழா­சி­ரி­யர்­கள் திறம்­பட சமா­ளித்து வரு­கி­றார்­கள் என்று தொடர்பு, தக­வல், சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்சேரி புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

தமிழ்­மொழி கற்­பிப்­ப­தில் இத்­த­கைய சாத­னை­களை நிகழ்த்­திய ஆறு ஆசி­ரி­யர்­களுக்கு நேற்று நல்லா­சி­ரி­யர் விரு­து­ வழங்கப்பட்டது. மேலும், வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து­களும் சிறந்த பயிற்­சி­யா­சி­ரி­யர் விரு­தும் வழங்­கப்­பட்­டன.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்­கப்­பூர் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகி­யவை இணைந்து நடத்­திய ‘நல்­லா­சி­ரி­யர் விருது 2022’ விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று டாக்­டர் ஜனில் விரு­து­களை வழங்­கி­னார்.

SPH Brightcove Video

விரு­து­பெற்ற ஆசி­ரி­யர்­கள் திறன் மேம்பாட்டுக்கு தொடர் கற்­றல் அவ­சி­யம் என்பதற்கு முன்னு தாரணமாக உள்ளனர். கற்­றல் கற்­பித்­தல் அணு­கு­மு­றை­களை பிற ஆசி­ரி­யர்­க­ளு­டன் பகி­ரும் பக்­கு­வப்­பட்ட ஆசி­ரி­யர் சமூ­க­மாக உரு­வாகியுள்ளனர் என்றார் அமைச்சர்.

தமிழ் கற்­ப­தற்­கான பாதை­யைத் தொடர்ந்து உரு­வாக்கி வரும் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூ­ரின் முன்­னோ­டித் தமி­ழா­சி­ரி­யர்­கள் அமைத்­தி­ருக்­கும் அடிப்­ப­டை­யைப் போற்­றிப் பேண வேண்­டும் என்ற அவர், வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தின் முக்­கி­யத்­து­வத்­தைக் குறிப்­பிட்­டார்.

மூத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளான திரு சாமிக்­கண்ணு சிதம்­ப­ரம், திரு பொன்­ன­ழகு மாணிக்­கம் ஆகிய இரு­வ­ருக்­கும் இவ்­வாண்­டின் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது அளிக்­கப்­பட்­டது.

தாய்­மொழி கற்­ற­லைப் புதுப்­பிக்கும் வழி­க­ளைக் கண்­ட­றி­வ­தில் அமைச்சு பாடு­பட்டு வரு­கிறது. பல மாண­வர்­கள் தங்­கள் தாய்­மொழியை ஆழ­மா­கக் கற்க பல்­வேறு வாய்ப்பு­களை அது வழங்கி வரு­கிறது.

அதே நேரத்­தில் அமைப்­பு­களும் சமூ­கப் பங்­கா­ளி­களும் தமிழ்மொழி­யை­யும் இந்­தி­யக் கலா­சா­ரத்­தை­யும் மேம்­படுத்­து­வ­தில் தொடர்ந்து முக்­கிய பங்­காற்றி வந்­துள்­ள­னர். தாய்­மொழி கற்­பது உயி­ரோட்­ட­மா­கத் திகழ சமூ­கத்­தின் பலத்­தைத் திரட்டு­வது முக்­கி­ய­மா­னது என்று டாக்­டர் ஜனில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய நாளி­த­ழ­தான தமிழ் முரசு 1935ஆம் ஆண்­டி­லி­ருந்து தமிழ்­மொழி கற்­ற­லுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கிறது. நாள்­தோறும் வெளி­வ­ரும் பதிப்­பிற்கு மேலாக, மாண­வர்­க­ளுக்கு என்றே மாண­வர் முரசு, இளை­யர் முரசு, பாலர் முரசு ஆகிய தனிப் பகு­தி­களை­யும் இணையத்தில் மாணவர் புதிர் பகு­தி­யை­யும் வெளி­யி­டு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

அதேபோல், சிங்­கப்பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவையும் தமிழ் மொழி கற்றலுக்கு ஆத­ர­வ­ளிப்பதை அமைச்சர் சுட்­டி­னார்.

உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலையத்தில் நடை­பெற்ற 21வது நல்­லா­சி­ரி­யர் விரு­து விழா­வில் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வின் தலை­வருமான விக்­ரம் நாயர் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!