ஒபாமாவிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங்: தென் சீனக்கடலைத் தற்காப்போம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் பேசிய சீன அதிபர் ஸி ஜின்பிங், தென் சீனக் கடலின் இறையாண்மையை தற்காப்போம் என்று கூறியிருக் கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நேரடி யாக பேசி அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். "சுதந்திரமான போக்குவரத் தை பெய்ஜிங் மதிக்கிறது," என்று திரு ஸி ஜின்பிங் குறிப்பிட்டார். வா‌ஷிங்டனில் நடைபெறும் அணுவாயுத உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த சீன அதிபர் ஸி ஜின்பிங், ஒபாமாவிடம் பேச்சு நடத்தினார்.

யாவின் ஏவுகணை சோதனை களைத் தடுத்து நிறுத்துவதில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சொன்னார். அண்மைய வாரங்களாக ஹைட்ரஜன் வெடிகுண்டு, ஏவு கணை சோதனைகளை வட கொரியா அடுத்தடுத்து நடத்தி வருகிறது. அமெரிக்காவும் சீனா வும் பேச்சு நடத்திய சில மணி நேரங்களில் நேற்று வடகொரியா மற்றொரு ஏவுகணையை பாய்ச் சியது. இந்த ஏவுகணை, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலோரத்தில் விழுந்தது என்று தென் கொரிய ஊடகங்கள் கூறின.

இந்நிலையில் அனைத்துலகக் கடப்பாட்டை மீறி பதற்றத்தை அதி கரிக்கும் அணுவாயுத ஏவுகணை சோதனைகளைத் தடுக்க தாமும் திரு ஸியும் விரும்புவதாக திரு ஒபாமா கூறினார். ஆனால் புதிதாக ஒப்புக்கொள்ளப்பட்ட தடைகளை முழுமையாகவும் கடுமையாகவும் அனைத்து தரப் பினரும் அமலாக்குவது சிரமம் என்று திரு ஸி கூறியதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஸின்ஹுவா குறிப் பிட்டது. வடகொரியாவின் நெருங்கிய தோழமை நாடான சீனா, அதனு டன் நீண்டகால வர்த்தகத் தொடர்புகளை வைத்துள்ளது.

வா‌ஷிங்டனில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!