$530,000க்கு ஏலம் போன ‘ஹாரி பாட்டர்’ கதாசிரியர் இருக்கை

நியூயார்க்: ஹாரி பாட்டர் எனும் பிரபல கதைத் தொகுப்புகளை எழுதிய பிரிட்டிஷ் கதாசிரியர் ஜே.கே. ரோலிங்கின் நாற்காலி (படம்) நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் $530,000க்கு விற்கப்பட்டது. கதாசிரியர் அந்தக் கதைத் தொகுப்பின் முதல் இரண்டு புத்தகங்களை அந்த நாற்காலியில் அமர்ந்து எழுதியதாகக் கூறப் படுகிறது. ஒற்றைப் பெற்றோராக, மானியத்துக்கு வழங்கப்பட்ட வீட்டில் ரோலிங் வசித்தபோது அவருக்கு இலவசமாக வழங்கப்பட்ட நான்கு தளவாடங் களில் இதுவும் ஒன்று. சிறுவருக்கு எதிரான கொடுமை களைத் தடுக்கும் தேசிய அமைப்பு ஒன்றுக்கு பயனளிக்கும் விதத்திலான ஏலம் ஒன்றுக்கு தமது இருக்கையை 2002ஆம் ஆண்டில் ரோலிங் நன்கொடையாக வழங்கினார். 2009ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மறு ஏலத்தில் 29,117 அமெரிக்க டாலருக்கு அந்த இருக்கை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!