ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் - ராணுவத்தினர் 12 பேர் பலி

ஜலாலாபாத்: ஆப்கான் இராணு வத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ஜலாலாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந் தது 12 பேர் மாண்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மோட்டார் வாகனத்தை ஓட்டி வந்த நபர் பேருந்தைக் குறிவைத்து வந்து மோதியதால் அது வெடித்த தாக தற்காப்பு அமைச்சின் பேச் சாளர் தவ்லத் வசிரி தெரிவித்தார். இருந்து காபூலுக்குச் சென்று கொண்டிருந்ததாக அவர் தெரி வித்தார். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டனர். 38 பேர் காயமடைந்ததாக மருத்துவ மனையின் தலைவர் கூறினார்.

இராணுவத்தினர் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சேதமடைந்த வாகனத்தின் சிதைவுகளைப் பார்வையிடும் போலிசார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!