ஒபாமா: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது நல்லது

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடித்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகக் கூறியுள்ளார். பிரிட்டனுக்கான மூன்று நாள் பயணத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுத்தியுள்ள திரு ஒபாமா, "பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும் செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயல் திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது'' என்று கூறியுள்ளார். பிரிட்டன் எடுக்கும் முடிவு,

இன்றைய அமெரிக்கர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால், இதில் தமக்கும் ஆர்வம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களுக்கு திரு ஒபாமாவின் கூற்று சினத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பத்திரிகையில் எழுதிய லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், அதிபரின் கருத்து ஒவ்வாதது என்று கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!