ஒபாமா மே கடைசியில் ஹிரோ‌ஷிமா வருகை

தோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா, மே மாதக் கடைசியில் ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகருக்கு வருகையளிப்பார் என்று ஜப்பானிய நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. 71 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு இலக்கான ஹிரோ‌ஷிமா நகருக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் வருகையளிக்க விருப்பது இதுவே முதல் தடவை. தோக்கியோவில் மே மாதக் கடைசியில் ஜி7 நாடுகளின் உச்சநிலைக் கூட்டம் நடைபெற வுள்ளது. அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தோக்கி-யோ வரும் திரு ஒபாமா, நிச்சயமாக ஹிரோ‌ஷிமா நகருக்கு வருகை யளிப்பார் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.

மே 27ஆம் தேதி திரு ஒபாமா தோக்கியோ வரத் திட்டமிட்டுள்ள தாக வா‌ஷிங்டன் தகவல்கள் கூறின. பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோ‌ஷிமா நகருக்குச் செல்வது அமெரிக்கா வில் சர்ச்சைக்குரிய விஷயமாக கருதப்படும். அந்த வருகை, ஹிரோ‌ஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்கியதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக பார்க்கப்படுவதால் அது சர்ச்சை-யை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோ‌ஷிமா நகர் மீது ஜப்பான் அணுகுண்டு வீசியது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாக்கி நகர் மீது அமெரிக்கா மற்றொரு அணுகுண்டு தாக்குதல் நடத்தி யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!