தெருவோரவாசிகளை அகற்றும் நடவடிக்கை

பிலிப்பீன்ஸ் தலைநகரமான மணிலாவில் தெருவோரங்களில் வசிப்போரை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் நகர மண்டப ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வேறிடத்திற்கு அகற்றும் பணியில் இறங்கினர். பிலிப்பீன்சின் கால்வாசி பேர், அதாவது 100 மில்லியன் மக்கள் ஏழ்மையில் உழல்கின்றனர். அவர்கள் நாளொன்றுக்கு ஒரே ஒரு டாலரில் உயிர் வாழ்வதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் தெரிவிக்கிறது. உணவே பிரச்சினை எனும் நிலையில் உறைவிடம் என்பது இவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. எனினும், அரசாங்கம் நகரை மறுநிர்மாணம் செய்ய நினைப்பதால் அவர்களை வேறிடத்திற்கு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. படம்: ஏஎஃப்பி