வெடிகுண்டு என்று சொன்னாலே கைது

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களுக்குச் செல்லும்பட்சத்தில் வாய்தவறி கூட 'வெடிகுண்டு' என உச்ச ரித்து விடாதீர்கள். அது, உங்க ளைச் சிறையில் தள்ளிவிடும். அப்படி வெடிகுண்டு என்று சொன்னதற்காக கடந்தாண்டு முதல் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உயர் போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அவர்களில் பலர் விமான நிலையப் பகுதிகளிலும் பயண உடைமை ஆயத்த முகப்புகளி லும் நகைச்சுவையாக 'வெடி குண்டு' என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர்," என மாவட்ட போலிஸ் தலைமைத் துணை ஆணையர் அப்துல் அஸிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

"இது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேடிக்கையாகக்கூட அப்படிப் பேசவேண்டாம் என்பதைப் பொதுமக்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார். விமான நிலைய நெருக்கடி நேரத் திட்ட விதி 92ன் கீழ் அந்தப் பதினைந்து பேர் மீதும் குற்றவியல் அச்சுறுத்தல் வழக் குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 'வெடி குண்டு' என்ற சொல்லை உச்ச ரிப்பதை ஒரு மிரட்டலாகவும் பெருங்குற்றமாகவும் அந்த விதி வகைப்படுத்துகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!