சிரிய அகதி முகாம் தாக்குதலுக்குக் கண்டனம்

டமாஸ்கஸ்: சிரியாவின் அகதி முகாமில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போர்க் குற்றத்துக்கு இணையானது என்று மூத்த ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். வடக்கு இட்லிப் மாநிலத் திலுள்ள கமவுனா முகாமில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக ஸ்டீஃபன் ஓபிரியன் 'பிபிசி' செய்தியிடம் கூறினார். இந்தத் தாக்குதலை சிரியா அல்லது ரஷ்யப் படைகள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

வன்முறை நிறைந்த இப் பகுதியில் தாங்கள் தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்று சிரிய ராணுவம் ஏற்கெனவே மறுத்துள்ளது. சண்டை நிறுத்த உடன்பாடு நீட்டிக்கப்பட்டதற்கு மறுநாளான நேற்று முன்தினம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் ஐநா இதனை வன்மையாகக் கண் டித்துள்ளது. முன்னதாக அலெப்போ நக ரில் சிரிய ராணுவத்துக்கும் கலகப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை அமெரிக்க, ரஷ்ய தரப்புகள் கேட்டுக்கொண் டதைத் தொடர்ந்து தற்காலிக மாக நிறுத்திவைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!