ராணுவ ஆட்சியைக் குறை கூறிய 8 பேர் பிணையில் விடுவிப்பு

தாய்லாந்தில் ராணுவ ஆட்சியைக் குறை கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டதற்காக கைது செ-ய்யப்பட்ட தொண்டர்கள் 8 பேர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்து ராணுவம் 2014 ஆம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அரசியலமைப்பு முறை நடப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ள போதிலும் ராணுவ ஆட்சியை பலர் மறைமுகமாக எதிர்த்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தொண்டர்கள் ராணுவ நீதிமன்றத்திலிருந்து செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next