சாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு

கோலாலம்பூர்: சாபா கடற்கரையில் கடந்த 3ஆம் தேதி தொலைந்த நால்வர் பயணம் செய்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்த நால்வரும் உயிருடன் திரும்பி வந்துள்ளனர். வியட்னாமைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களை மீட்க மலேசிய மீட்புக் குழுவினருக்கு உதவியதாக மலேசியக் கடற்துறை அதிகாரி கள் தெரிவித்தனர். சீன நாட்டவர் ஒருவர், மலேசியர் ஒருவர், ஸ்பெயின் நாட்டினர் இருவரும் அந்தப் படகில் சென்றனர்.